Advertisement

வாய்வு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம்

வாய்வு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம்

வாய்வு தொல்லை என்பது அனைத்து மனிதர்களுக்கும் இருக்கக்கூடிய ஒன்று தான். சில நேரங்களில் இது சிலருக்கு தர்ம சங்கடமான சூழலை கூட உருவாகிவிடும். நாம் வெளியேற்றும் வாய்வில் நாற்றம் இல்லாதவரை நமது உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் நாற்றம் இருந்தால் நாம் நிச்சயம் அதை சரி செய்யவேண்டியது அவசியமாகிறது. நமது உடலில் இருந்து ஆசன வாய் வழியாக ஒருநாளைக்கு 15 முறை வாய்வை வெளியேற்றலாம். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பால் சம்மந்தமான உணவுகள், முட்டை கோஸ், பட்டாணி, வெங்காயம், காலிஃபிளவர் போன்ற சில பொருட்களை அதிகம் உண்பதால் வாய்வு தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது. வாய்வு தொல்லையில் இருந்து விடப்பட தீர்வு என்ன என்பது குறித்து சித்த மருத்துவம் கூறும் குறிப்புகளை பார்ப்போம் வாருங்கள்.

gas trouble (Vaayu Thollai)

குறிப்பு 1 :

சீரகம், ஏலம், பச்சைக் கற்பூரம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்துக்கொண்டு பொடி செய்து, காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் சக்கரையோடு சேர்த்து உண்டு வந்தால் வாயு தொல்லை நீங்கும்.

குறிப்பு 2 :

துளசி சாறு மற்றும் இஞ்சி சாறை தலா மூன்று ஸ்பூன் எடுத்துக்கொண்டு காலை மாலை என இரு வேலையும் மூன்று நாட்களுக்கு குடித்து வர வாய்வு தொல்லை நீங்கும்.

குறிப்பு 3 :

சுக்குமல்லி காபியை குடிப்பது, பூண்டு குழம்பு வைத்து மதியம் உண்பது, முடக்கத்தான் கீரையை வதக்கி சாப்பிடுவது போன்ற சில எளிய முறைகளை கொண்டும் வாயு தொல்லையில் இருந்து விடுபடலாம்.

Garlic(Poondu)

குறிப்பு 4 :

சாப்பிடும் சமயத்தில் பேசாமல் சாப்பிடவேண்டும். நாம் பேசிக்கொண்டே சாப்பிடுவதால் நம்மை அறியாமல் உணவோடு சேர்ந்து தேவைக்கு அதிகமான காற்றும் வயிற்றுக்குள் செல்கின்றது. அந்த காற்று மீண்டும் ஏப்பமாகவோ அல்லது ஆசன வாய் வழியாகவோ வெளியேறுகிறது. தேவை இல்லாமல் காற்று வெளியேறுவதை தவிர்க்க நாம் தேவை இல்லமால் காற்றை உட்கொள்ளாமல் இருந்தாலே போதும்.

eating food

குறிப்பு 5 :

எண்ணெய் சம்மந்தமான உணவுகளை தவிர்த்து வேகவைத்த உணவுகளை உண்பது, இரவு உணவை தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக உண்பது, பால் சம்மந்தமான பொருட்கள், இறைச்சி போன்றவற்றை குறைத்து, பச்சை காய் கறிகள் உண்பது, தினமும் நடை பயிற்சி மேற்கொள்வது போன்றவற்றின் மூலம் வாயு தொல்லையில் இருந்து விடுபடலாம்.