Advertisement

குடிப்பழக்கத்தில் இருந்து வெளிவர வேண்டுமா? இதில் ஏதாவது ஒரு வழியை பின்பற்றினால் கூட போதும்.

குடிப்பழக்கத்தில் இருந்து வெளிவர வேண்டுமா? இதில் ஏதாவது ஒரு வழியை பின்பற்றினால் கூட போதும்.

palakkam

குடியை நிறுத்த வேண்டும் என்றால் குடிப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து, மனதில் உறுதியான கொள்கையை வைத்துக்கொண்டு, தாங்களாகவே குடிக்கக்கூடாது என்று நினைத்தால் தான் முடியும். மற்றவர்கள் அறிவுரை கூறியெல்லாம் குடிப்பவர்களை, சுலபமாக குடியிலிருந்து மீட்டு எடுத்து விட முடியாது. ‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை நிறுத்த முடியாது’. ‘குடிகாரர்களே பார்த்து குடியை நிறுத்தாவிட்டால் குடிப்பழக்கத்தில் இருந்து அவர்களை விடுவிக்க முடியாது’. இதுதான் உண்மை. நீங்கள் குடி பழக்கம் உடையவர்களாக இருந்தால், உங்களது ஒருவர் வாழ்க்கை மட்டும் வீணாவதில்லை. உங்களை திருமணம் செய்த மனைவி, உங்களது குழந்தை, உங்களது தாய், தந்தை இவர்கள் அனைவருமே பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதை முதலில் நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும். உங்களது போதைக்காக அடுத்தவர்களையும் சேர்த்து துன்புறுத்துவது மிகவும் தவறான ஒன்று. எப்படியோ, எந்த சூழலோ ஒருவர் குடிக்க ஆரம்பித்து விடுகிறார். என்ன செய்வது? இந்த வழிமுறைகளை பின்பற்றினால் குடியை நிறுத்திவிட முடியும் என்று கூறுகிறது இயற்கை மருத்துவம். உங்களது வீட்டில் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு இதைப் பயன்படுத்திப் பார்க்கலாம். இதைப் படிப்பவர்களுக்கு குடிப்பழக்கம் இருந்தால் மன உறுதியோடு நீங்களே இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

tumbler

முதலில் ஏலக்காய் விதை, எலுமிச்சை விதை இவை இரண்டையும் சம அளவாக எடுத்துக் கொண்டு, நன்றாக வெயிலில் காய வைத்து, நன்றாக அரைத்து பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். இந்தப் பொடியை நீங்கள் சமைக்கும் ஏதாவது ஒரு குழம்பு வகையில் கலந்து விட வேண்டும். குறிப்பாக மீன் குழம்பு கறி குழம்பில் கூட கலக்கலாம். குடிப்பவர்களுக்கு தெரியாமலேயே இதை 30 நாட்கள் தொடர்ந்து சாப்பிட கொடுத்து விட்டால், நல்ல முன்னேற்றம் தெரியும். குடிக்கும் அந்த ஆல்கஹால் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது. வாந்தியை உண்டாக்கும். இதனால் குடிக்க வேண்டாம் என்ற மனநிலைக்கு அவர்கள் வந்துவிடுவார்கள். பொதுவாகவே குடிப்பவர்களுக்கு காரசாரமான கறி குழம்பு, மீன் குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும். அதில் இந்த மறந்து கலப்பது தெரியாமல் சாப்பிட வைத்து விடுங்கள்.

அடுத்ததாக வில்வம் இலை 5, மிளகு 11, வரமல்லி(கொத்தமல்லி)11. இந்த பொருட்களெல்லாம் இதே அளவுதான் வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை தேவைப்பட்டால் கொஞ்சம் அதிகப்படுத்திக் கொள்ளலாம். இவை அனைத்தையும் நன்றாக அரைத்து அல்லது இடித்து 200ml தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 48 நாட்கள் குடிக்க வேண்டும். இதை அவர்களுக்கே தெரியாமல் குடிக்க வைக்க முடியாது. குடியை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் ஒருவருக்கு எப்போது தானாக வருகிறதோ அப்போது இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். 48 நாட்கள் தொடர்ந்து இதைச் செய்து வந்தால் நிச்சயமாக நல்ல முன்னேற்றம் தெரியும். முடிந்தால் வீட்டிலுள்ளவர்கள் கட்டாயப்படுத்தி இதைக் குடித்த வைத்து விடலாம்.

kashayam

நீங்கள் நீண்ட நாட்களாக குடித்து உங்களது கல்லீரல், மண்ணீரல் நிச்சயம் பாதிக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்டவர்கள் பின்வரும் குறிப்புகளை ஏதாவது ஒன்றை பின்பற்றினால் கூட நல்ல பலன் இருக்கும்.


ஒரு டம்ளர் தண்ணீரில் 5 பேரிச்சம் பழங்களை ஊறவைத்து தினம்தோறும் காலை வேளையில் குடித்து வந்தால் குடி பழக்கத்தை கை விடவும் முடியும். உங்களது ஆரோக்கியமும் மேம்படும்.

pavakkai

பாகற்காயை நன்றாக அரைத்து ஒரு குழி கரண்டி சாறு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஒரு டம்ளர் மோரில் அந்த சாற்றை கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன் இருக்கும்.

ஆப்பிள் பழச்சாறு குடித்து வந்தால் உடலில் இருக்கும் நச்சுத்தன்மை நீங்கும். அதிகமான குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு உடம்பில் உள்ள ரத்தத்தில் விஷத்தன்மை கொண்ட நச்சுப்பொருட்கள் அதிகமாக சேர்ந்து கொண்டே வரும். இது உயிருக்கே ஆபத்தாக போய் முடியும்.

Carrot juice benefits in Tamil

உங்களுக்கு மதுபானத்தை குடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்போதெல்லாம் கேரட் ஜூஸ் குடிக்கலாம். அல்லது எலுமிச்சை பழ ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதை பழக்கமாக வைத்துக் கொள்ளலாம்.

குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ரத்தசோகை இருக்கும் அதைத் தடுக்க வாழைப்பழம் சாப்பிட்டு வரலாம்.

இதெல்லாம் எனக்குத் தெரியும். ஆனால் நான் குடிப்பதை விடமாட்டேன். என்று ஒற்றைக்காலில் நினைப்பவர்களை அடித்து உதைத்து பூட்டி வைத்தால் கூட, திரும்பவும் வெளியில் வந்தால் கேடிக்க தான் செய்வார்கள். இதெல்லாம் போதை செய்யும் வேலை. குடியின் போதைக்கு அடிமைப் பட்டவர்களின் மீது, பாசம் என்னும் போதையை திணித்தால் கூட நிச்சயமாக மாறுவார்கள்.