Advertisement

அம்மை நோய் நீங்க எளிய மருத்துவ குறிப்புகள்

அம்மை நோய் நீங்க எளிய மருத்துவ குறிப்புகள்

அம்மை நோய் என்றாலே எல்லோரும் சற்று அச்சமடைவது இயல்பு. இந்நோய் வந்தால் சில நாட்களுக்கு வெளியில் எங்கும் செல்ல முடியாது. சின்னம்மை, தட்டம்மை, பெரியம்மை என்பது அம்மை நோய்களின் சில வகைகளாகும். கிராம மக்கள் இந்நோயை “அம்மன் இறங்குதல்” என்று குறிப்பிடுவார்கள். இந்நோய் தொற்றும் தன்மைக் கொண்டது. ஏற்கனவே இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுடன் பழகுவதால் இந்நோய் மற்றவர்களுக்கு பரவும். மேலும் கோடைக்காலத்தில் உடல் அதிக வெப்பமடைவதாலும் இந்நோய் ஏற்படும்.

ammai noi

அம்மை நோய் அறிகுறிகள்:

முதலில் இது சாதாரண காய்ச்சல் போல தான் துவங்கம். ஆனால் ஓர் இரு நாளில் காய்ச்சல் கடுமையாகும், கை, கால் வலி, தலைவலி போன்றவை ஏற்படும். அதோடு உடலில் ஆங்காங்கு அரிப்பு ஏற்பட்டு சிறு சிறு கொப்பளங்கள் வர துவங்கும்.

அம்மை நோய் வந்தர்வர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து சித்த மருத்துவம் கூறும் சில குறிப்புகளை கீழே பார்ப்போம்.

குறிப்பு 1 :

அம்மை நோய் விரைவில் குணமாக வேப்பிலை படுக்கை என்பது அவசியமாகிறது. மெல்லிய ஆடையை உடுத்துக்கொண்டு தரையில் ஒரு துணி போட்டு அதன் மேல் வேப்பிலை போட்டு படுத்திருந்தால் இந்த நோயின் தாக்கம் குறையும்.

Neem

குறிப்பு 2 :

அம்மை நோய் அதிக அளவில் பரவுவதற்கும், அந்த நோயால் ஏற்பட்ட குப்பளங்களின் தழும்புகள் எளிதில் மறையவும் வேப்பிலை உதவுகிறது. அம்மை நோய் உள்ள காலங்களில், உடல் முழுவதும் நிறைய அரிப்பு இருக்கும். அந்த சமயத்தில் விரல்களால் சொறியக்கூடாது. மாறாக வேப்பிள்ளையை எடுத்து அரிப்பு ஏற்படும் இடத்தில் தடவி விட வேண்டும். இதனால் அந்த கொப்பளத்தில் இருந்து வடியும் நீர் வேறெங்கும் பரவாமல் இருக்கும்.

குறிப்பு 3 :

மலை வாழைப்பழத்தை உண்பதற்கு கொடுக்க வேண்டும். இதன் மூலம் அம்மையால் வயிற்றில் ஏற்பட்ட ரணங்கள் ஆறும். 20 வேப்பிலை இலைகளை எடுத்துக்கொண்டு அதோடு சிறிதளவு மஞ்சள் சேர்த்து ஒரு டம்ளர் நீர் ஊற்றி நன்கு சுண்டும் வரை காய்ச்சி அதை குடிக்க வேண்டும். இதன் மூலம் அம்மை விரைவில் குணமாகும்.

vepilai

குறிப்பு 4 :

அம்மை இறங்கும் சமயத்தில் குளிக்கும் போது வேப்பிலையையும் மஞ்சளையும் கலந்து நன்கு மைபோல் அரைத்துக் கொண்டு உடல்முழுக்கப் பூசிக்கொண்டு சிறிது நேரங்கழித்து மஞ்சள்தூள் கலந்த வேப்பிலையை ஊறவைத்த குளிர்ந்த நீரில் தலைக்கு ஊற்றிக்கொள்ள அம்மைநோய் முழுவதுமாக நீங்கும்.

குறிப்பு 5 :

அம்மை நோய் பரவ முதல் காரணம் இந்நோயின் தொற்றும் தன்மை என்று ஏற்கனவேக் கண்டோம். இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களிடம் சில நாட்களுக்கு உடல்ரீதியாக நெருங்காமல் இருப்பதால் இந்நோய்த் பரவலைத் தடுக்க முடியும். அதோடு அவர்கள் பயன்படுத்திய ஆடை, போர்வை, துண்டு போன்றவற்றை நன்கு துவைக்காமல் பயன்படுத்த கூடாது.

vepillai

வாழுமிடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல்,தூய்மையான ஆடைகளை அணிதல், உடல் வெப்பம் மற்றும் வியர்வையினால் ஏற்படும் கிருமிகளை போக்க தினமும் இருவேளைக் குளித்தல், போன்ற சுற்றுப்புற, உடற்தூய்மையைக் காப்பதின் மூலமும் அம்மை ஏற்படாமல் தடுக்கலாம்.