Advertisement

பைல்ஸ் நோய் குணமாக குறிப்புகள்

பைல்ஸ் நோய் குணமாக குறிப்புகள்

ஒரு மனிதனின் ஆரோக்கியம் அவனது வயிற்றை பொறுத்து தான் இருக்கிறது என்பது ஒரு பழமொழி. அந்த வயிற்றில் இடப்படும் எப்படிப்பட்ட உணவையும் செரித்து, குடல்களின் வழியே சென்று கழிவாக வெளியேறுவது ஒரு ஆரோக்கியமான உடலுக்கு அடையாளமாகும். ஆனால் ஒரு சிலருக்கு உணவுக்கழிவுகளை வெளிவேற்றும் குடல் சார்ந்த உறுப்புகளில் சில பிரச்சனைகள் உண்டாகின்றன. அப்படிப்பட்ட ஒன்று பைல்ஸ் என்று சொல்லக்கூடிய மூலநோய். இந்த மூலநோயை பற்றியும் அதற்கான மருத்துவத்தை பற்றியும் இங்கு தெரிந்து கொள்வோம்.

Man

பைல்ஸ் வர காரணம்

  • பைல்ஸ் ஒருவருக்கு ஏற்பட முதன்மை காரணமாக இருப்பது மலச்சிக்கல் ஆகும். தினமும் மலம் கழிக்க முடியாதவர்களுக்கு இப்பிரச்சனை உருவாக அதிகம் வாய்ப்புள்ளது.

  • ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து பணிபுரிவது பைல்ஸ் வர ஒரு காரணம் ஆகும்.

  • உடலில் உஷ்ணம் அதிகரித்தாலும் பைல்ஸ் வர வாய்ப்புகள் உள்ளது .

  • அதிகம் நீர் அருந்தாமை பைல்ஸ் வர காரணம் ஆகும்..

  • காரம் மிகுந்த மற்றும் மாமிச உணவுகளை அதிகம் உண்ணல் ஆகியவை இந்த மூலநோய் ஏற்பட காரணங்கள் ஆகும்.

மூலநோய் அறிகுறிகள்

  • ஆசன வாய் சதையில் ஒரு புடைப்பு ஏற்படும். இந்த மூலநோயில் ஆசனவாய்க்கு உட்புறமாக ஏற்படும் புடைப்பு உள்மூலம் எனவும், அந்த உட்புற சதையிலிருந்து மலம் கழிக்கும் போது ரத்தம் கசிந்தால் அது ரத்த மூலம் என வகைப்படுத்தப்பற்றிருக்கிறது.

  • அமரும் போதும், மல்லாந்து படுக்கும் போதும் லேசாக வலிக்கும். அந்த இடத்தில் தொடர்ந்து சிலருக்கு அரிப்பு ஏற்படும்.

  • மனதில் ஒரு நிம்மதியற்ற நிலை ஏற்படும்.

பைல்ஸ் குணமாக மருத்துவ குறிப்புக்கள்

  • முதலில் எவருமே தங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கார உணவுகளையும், மாமிச உணவுகளையும் உண்பதை குறைத்து கொள்ள வேண்டும்.

  • மூலம் ஏற்பட்டிருக்கும் இடத்தில் விளக்கெண்ணையை தடவி வர பைல்ஸ் குணமாகும்.

oil

  • துத்தி இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி, மூலம் ஏற்பட்டிருக்கும் இடத்தில் களிம்புபோல் வைத்து கட்ட வேண்டும். இதன் மூலம் பைல்ஸ் குணமாகும்.

  • நீர் சத்துகள் அதிகம் உள்ள பழங்களை அதிகம் உண்டு வந்தால் பைல்ஸ் குணமாகும்.

  • அருகம் புல் சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவது நல்லது.

arugampul juice

  • பப்பாளி பழ துண்டுகளை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வர வேண்டும்.