Skip to main content

மரு நீங்க இயற்கை வைத்தியம்

மரு நீங்க இயற்கை வைத்தியம்

நமது உடலில் மருக்கள் வருவது சாதாரணம் என்றாலும் சிலருக்கு முகத்திலும் கழுத்திலும் மரு வருவதால் அது அழகு சார்ந்த பிரச்சனையாக மாறுகிறது. இது போன்ற மருக்கள் முழுவதுமாக நீங்க நமது நாட்டு வைத்ததில் பல வழி வகைகள் உள்ளன. அந்த வகையில் மருக்கள் நீங்க சித்த மருத்துவம் கூறும் சில எளிய குறிப்புகளை பார்ப்போம் வாருங்கள்.

maru

மருக்கள் நீங்க குறிப்பு 1 :

எலுமிச்சை சாறை கொண்டு மருக்களை எளிதில் நீங்க செய்யலாம். மருக்கள் உள்ள இடத்தில் எலுமிச்சை சாறை தடவி 20 நிமிடங்கள் வரை நன்கு ஊறவைக்க வேண்டும். அதன் பிறகு வெண்ணீர் கொண்டு மருவுள்ள இடத்தை கழுவி விட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர மருக்கள் நீங்கும்.

மருக்கள் நீங்க குறிப்பு 2 :

இஞ்சியின் மேல் தோலை சீவிவிட்டு, அதை மரு உள்ள இடங்களில் நன்றாக தேய்க்க வேண்டும். சற்று வலி எடுத்தாலும் தொடர்ந்து தேய்க்க வேண்டும். இப்படி செய்து வந்தால் ஒரு வாரத்தில் மருக்கள் அனைத்தும் மறைந்து போகும்.

மருக்கள் நீங்க குறிப்பு 3 :

பூண்டை அரைத்து அதை மரு உள்ள இடங்களில் தடவி அரைமணி நேரம் நன்கு ஊறவைக்க வேண்டும். அதன் பிறகு அதை வெந்நீரில் வழிவி விட வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது இப்படி செய்தால் சில நாட்களில் மருக்கள் நீங்கும்.

Garlic poondu

மருக்கள் நீங்க குறிப்பு 4 :

சுண்ணாம்பை குழைத்து மரு இருக்கும் இடத்தில் தடவி வெற்றிலையை கொண்டு மருவாய் தேய்த்தால் மரு நீங்கும்.

மருக்கள் நீங்க குறிப்பு 5 :

வெங்காயத்தை பனிரெண்டு மணி நேரம் உப்பில் ஊறவைத்து பிறகு அதை மைய அரைத்து மரு இருக்கும் இடத்தில் தடவி அரைமணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும். பிறகு வெந்நீர் கொண்டு கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்வதன் மூலம் மருக்கள் நீங்கும்.

onion

மருக்கள் நீங்க குறிப்பு 6 :

வாழைப்பழ தோலை கொண்டு மருக்கள் உள்ள இடங்களில் நன்கு தேய்த்து வர மருக்கள் மறையும்.

மருக்கள் நீங்க குறிப்பு 7 :

அத்திப்பழ தண்டின் சாறை மருக்கள் மீது தடவி வர மருக்கள் நீங்கும். இதனை ஒரே நாளில் பல முறை கூட செய்யலாம்.