Advertisement

கண் வலி நீங்க பாட்டி வைத்தியம்

கண் வலி நீங்க பாட்டி வைத்தியம்

தினம் தோறும் பல மயில் தூரம் வண்டியில் செல்பவர்கள், பல மணி நேரம் கணினி முன்பு அமர்ந்து வேலை செய்பவர்கள். புகை அதிகம் உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் போன்றவர்களுக்கு கண்ணில் கோளாறு வர அதிகம் வாய்ப்புள்ளது. ஆகையால் இவர்கள் கண்களை பாதுகாப்பது அவசியமாகிறது. கண்களில் உள்ள கோளாறு நீங்க சித்த மருத்துவம் கூறும் சில குறிப்புகளை பார்ப்போம் வாருங்கள்.

eyes

குறிப்பு 1 :

கண் கூசுதல், கண் சிவந்து போதல் போன்றவை சில நேரங்களில் கிருமி தோற்றால் கூட ஏற்படலாம். அது போன்ற சமயங்களில் உப்பு கலந்த வெந்நீரில் பஞ்சை நனைத்து அதை கண்களின் மேல் துடைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கண்களில் ஏதாவது கிருமிகள் இருந்தால் அழியும். அதே போல மஞ்சள் தூளை வெண்ணீரில் கலந்து அதையும் கண்களின் மேல் துடைக்கலாம்.

குறிப்பு 2 :

கண்ணில் கட்டிகள் வந்தால் கண் வலி ஏற்படும். இதை குணப்படுத்த 10 மி.லி பன்னீரை எடுத்துக்கொண்டு அதில் மூன்று கிராம் மஞ்சள், மூன்று கிராம் படிகாரம் மற்றும் பத்து கிராம் மரமஞ்சள் ஆகியவற்றை சேர்த்து ஒரு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். அதன் பிறகு காலையில் எழுந்த உடன் அதை வடிகட்டி வேண்டும். வடிகட்டிய நீரை கொண்டு கண்களை கழுவி வர ஓர் இரு நாட்களில் கண்களில் உள்ள வலி குறையும். அதோடு சில நாட்களில் கண்ணில் உள்ள கட்டி நீங்கும்.

Turmeric

குறிப்பு 3 :

கண் வலி உள்ளவர்கள் இரண்டு கை பிடி அளவு புளியம்பூவை பறித்து அதை நீர் விட்டு நன்கு அரைத்து கண்களை சுற்றி பற்று போடவேண்டும். இப்படி செய்வதன் மூலம் கண் வலி குணமாகும். அதோடு கண்கள் சிவந்திருந்தால் அதுவும் குறையும்.

குறிப்பு 4 :

சிலருக்கு கண்களில் அடிக்கடி அல்லது தொடர்ந்து நீர் வடிதல் பிரச்சனை இருக்கும். அது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி, வெள்ளம், மிளகு மற்றும் வேளைக்கீரை ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு சிறிது நீர் விட்டு நன்கு அரைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவிற்கு சாப்பிட வேண்டும். இதை தொடர்ந்து செய்வதன் மூலம் சில நாட்களில் கண்ணில் நீர் வடிதல் பிரச்சனை சரியாகும்.

Ginger - Inji

குறிப்பு 5 :

தண்ணீரில் சீரகத்தை போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்த நீரை கொண்டு கண்களை கழுவி வர கண் வலி நீங்கும். அதோடு கண்கள் சிவந்திருந்தால் அதுவும் குணமாகும். ஒரு துணியில் ஐஸ் கட்டியை சுற்றிக்கொண்டு அதை கண்கள் மீது ஒத்தடம் கொடுப்பதன் மூலம் கண்களில் வீக்கம் இருந்தால் குறையும். அதோடு கண் சிவப்பும் குறையும்.

மேலே உள்ள குறிப்புகளை ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி கண் நோயில் இருந்து விடுபடலாம்.