Advertisement

காடை முட்டை நன்மைகள்

காடை முட்டை நன்மைகள்

இந்த பரபரப்பான உலகத்தில் நம்மில் பலருக்கு அவசர அவசரமாக விடியும் காலை பொழுதில், காலை நேர உணவு என்பது மிகவும் முக்கியமானது. பரபரப்பாக அதை சமைத்து முடித்தாலும் நேரமின்மை காரணமாக அதனை சாப்பிட்டும் சாப்பிடாமலும் ஓடுவதே பலரின் இயல்பாக உள்ளது. காலை உணவு மிகவும் அவசியமானது என்பதை மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். அதிலும் காலை உணவில் கண்டிப்பாக ஒரு சத்தான ஆகாரம் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். காலை வேளையில் சுலபமாகவும் சத்துக்கள் நிறைந்ததாகவும் சமைக்க வேண்டும் என்றால் அதில் முக்கிய பங்கு வகிப்பது முட்டையும் ஒன்று. கோழி முட்டைகளை நாம் அதிகமாக உண்டு வந்தாலும், அளவில் சிறியதாக காணப்படும் காடை முட்டையில் உள்ள சத்துக்கள் ஏராளம். கோழி முட்டையை விட மூன்றிலிருந்து நான்கு மடங்கு அதிகமான சத்து காடை முட்டையில் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. காடைகள் ஒரு வருடத்தில் 250 முட்டைகள் வரை இடுகின்றது. இந்த காடை முட்டையின் சிறப்புகளை பற்றி தான் இந்த பதிவில் காணப் போகின்றோம்.

Kadai muttai benefits tamil

காடை முட்டை பயன்கள்

காடை முட்டை நம் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. கோழி முட்டையில் 11 சதவிகித புரதம் உள்ளது. காடை முட்டையில் 13 சதவிகித புரதச்சத்து உள்ளது.  100 கிராம் காடை முட்டையில் சோடியம்-141 மில்லிகிராம், பொட்டாசியம்-132 மில்லி கிராம், கார்போஹைட்ரேட் 0.4 கிராம், சர்க்கரை சத்து 0.4 கிராம், புரதச்சத்து 13 கிராம், விட்டமின் ஏ 10%, கால்சியம் 6%, விட்டமின் டி 13%, விட்டமின் பி12 26%, மற்றும் மெக்னீசியம் 3% போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

கர்ப்ப காலத்தில்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஆரோக்கியத்தில் உள்ள குறைபாட்டினை இந்த காடை முட்டையின் மூலம் தவிர்க்கலாம். கருவில் வளரும் குழந்தையின் எலும்பினை உறுதியாக்க காடை முட்டையில் உள்ள சத்துகள் உதவுகின்றது. இந்த முட்டையில் அதிக அளவு விட்டமின் டி உள்ளதால் கால்சியத்தை ஈர்க்கும் தன்மையும் இதற்கு உண்டு.

Kadai muttai benefits tamil

அலர்ஜி

காற்று மாசுபாட்டினால் பலருக்கும் அலர்ஜியின் காரணமாக மூக்கிலிருந்து நீர் வடிதல், தும்பல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். காடை முட்டையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இந்த அலர்ஜியில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உணவில் தினமும் இரண்டு காடை முட்டைகள் கொடுத்து வந்தால் நல்ல உடல் வளர்ச்சி பெற்று, தொற்று நோய்த் தாக்குதலில் இருந்து காப்பாற்றப்படுவார்கள்.

சரும ஆரோக்கியம்

முட்டையின் வெள்ளைக் கருவானது சருமத்தின் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் கோழி முட்டையை விட இந்த காடை முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள புரத சத்து அதிக சக்தி வாய்ந்தது. இது உங்கள் சரும அழகினை பாதுகாக்க உதவுகின்றது.

Kadai muttai benefits tamil

இளமையாக இருக்க

காடை முட்டையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் இளமையான தோற்றத்தைப் பெற முடியும். இதில் உள்ள விட்டமின் ஏ சிலினியம் மற்றும் ஜிங்க் போன்றவைகள் உங்களது சருமத்தை பாதுகாக்க செய்கிறது. இதிலுள்ள ஆன்ட்டி ஆக்சிடண்ட் உங்களது சரும செல்களை பாதிப்பிலிருந்து தடுக்கிறது.

கண்களுக்கு

காடை முட்டையில் விட்டமின் ஏ உள்ளதால் உங்கள் கண்களின் நலனை பாதுகாக்கின்றது. சிறுவயதில் கண் பார்வை குறைபாடு உள்ள குழந்தைகள் காடை முட்டையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நல்ல பலனை அடையலாம்.

வயதானவர்கள்

இதில் எச்.டி.எஸ் என்னும் கொழுப்பு சத்து உள்ளதால் வயதானவர்களும் இதை உண்ணலாம். காடை முட்டையில் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பு சத்து குறைந்து இருக்கிறது. இது மனித மூளையை இயக்கும் கோலின் என்னும் வேதியியல் பொருள் நிறைந்துள்ளது.

Kadai muttai benefits tamil

புற்றுநோய்

காடை முட்டையில் புற்றுநோயை தடுக்கும் கார்சினோஜெனிக் பொருட்கள் அதிகம் உள்ளது. இதனால் புற்றுநோய் உள்ளவர்கள் இதனை உட்கொண்டு வருவதால் அதன் பாதிப்பிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

ரத்தசோகை

உங்கள் உடலில் ரத்தத்தில் அளவு குறைவாக இருந்தால் காடை முட்டை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து ரத்த சோகையை நீக்கும்.

Kadai muttai benefits tamil

உடல் சுத்தமாகும்

காடை முட்டை உடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் கனிமங்களை நீக்கிவிடும். குறிப்பாக பித்தப்பையில் உள்ள கற்கள் மற்றும் சிறுநீரக கற்களை இதை கரைத்து வெளியேற்றிவிடும்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த முட்டையை சாப்பிடுவதற்கு முன்பு உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டியது அவசியம்.