வால்நட் பயன்கள்
ஆங்கிலத்தில் வால்நட்ஸ் என்று கூறப்படும் அக்ரூட் பருப்பில் எண்ணிலடங்கா பல நன்மைகள் உள்ளன. இருதய கோளாறு முதல் புற்று நோய் வரை உடல் நீதியான பல நோகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. வால்நட் உண்பதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இங்கு விரிவாக பார்ப்போம் வாருங்கள்.
தலைமுடி
வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் புரதங்கள் அதிகம் இருப்பதால், முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது. இப்பருப்புகளை தொடர்ந்து உண்ணும் ஆண்களுக்கு தலையில் வழுக்கை ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
மூளை செயல்பாடு
வால்நட் பருப்புகளில் இருக்கும் சில வைட்டமின்கள் மற்றும் புரத பொருட்கள் ரத்தத்தில் கலந்து, மூளைக்கு செல்லும் போது, மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, நன்கு செயலாற்றுவதாக மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
மார்பக புற்று
இப்போதைய காலகட்டத்தில் பருவமடைந்த பெண்கள் அனைவரையும் அச்சுறுத்தும் நோயாக மார்பக புற்று நோய் இருக்கிறது. வால்நட்ஸ் பருப்புகளை அடிக்கடி உண்டு வரும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
நோயெதிர்ப்பு சக்தி
வால்நட் பருப்பில் இருக்கும் இயற்கையான ரசாயனங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, உடலை பல்வேறு வகையான நோய் தொற்றுகளிலிருந்து காக்கிறது. உடலில் இருக்கும் தீங்கான நுண்ணுயிரிகளையும் அழிக்கின்றது.
தூக்கம்
நரம்புகள் பாதிப்புகளால் சிலருக்கு தூக்கமின்மை ஏற்படுகிறது. தினமும் இரவு உணவின் போது வால்நட்ஸ் பருப்புகளை சாப்பிட்டு வருபவர்களுக்கு இரவில் நன்கு உறக்கம் ஏற்படும். மன அழுத்தங்களும் குறையும்.
சுவாச நோய்கள்
ஆஸ்துமா, பிராங்கைடிஸ் போன்ற நோய்கள் நுரையீரல்களில் தோன்றுவதாகும். இந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வால்நட் பருப்புகளை தினமும் இருவேளை உண்டு வருவது இப்பிரச்சனையிலிருந்து சற்று நிவாரணம் அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.
தோல் பராமரிப்பு
நமது உடலின் வெளிப்புற பகுதியான தோல் சிறிது ஈரப்பதத்தோடு இருப்பது ஆரோக்கியமானது. வால்நட்ஸ் பருப்புகள் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தோலின் ஈரப்பதம் வறண்டு போகாமல் பாதுகாக்கப்படுகிறது. தோல் சுருக்கங்களும் தடுக்கப்படுகிறது.
இதயம்
உடலுக்கு ஆதாரமாக இருப்பது இதயம் ஆகும். வால்நட் பருப்புகள் இதய தசைகளை நன்கு வலுப்படுத்துகிறது. இதயத்தில் ரத்த ஓட்டங்கள் சீராக இருப்பதற்கு வால்நட் பருப்புகள் உதவுகிறது.
வயிறு
உண்ணப்படும் உணவுகளை செரித்து உடலுக்கு தேவையான சக்தியாக மாற்றும் பணியை வயிறு செய்கிறது வால்நட்ஸ் பருப்புகளை அதிகம் உண்பவர்களுக்கு செரிமானத்திறன் மேம்படுகிறது வயிற்றில் அமிலங்களின் சுரப்பை சீராக்குகிறது.
வலிப்பு நோய்
பிறக்கும் போதே ஏற்படும் நரம்பு பாதிப்புகளால் சிலருக்கு வலிப்பு நோய் ஏற்படுகிறது. இந்த நோய்க்கு நிரந்தர தீர்வான மருந்துகள் மிகவும் குறைவு. வால்நட்ஸ் பருப்புகளை இந்த பாதிப்பு கொண்டவர்கள் உண்பது நிவாரணம் அளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பித்தப்பை
நமது உடலில் ஈரல் மற்றும் பித்தப்பை உடலுக்கு தேவையான சக்திகளை உற்பத்தி செய்கிறது. பித்தப்பைகளில் சிலருக்கு கற்கள் உருவாகின்றன. அதை கரைப்பதில் வால்நட்ஸ் சிறப்பாக செயல்படுகிறது.