வியாழன், 3 பிப்ரவரி, 2022

பிளம்ஸ் பயன்கள்

பிளம்ஸ் பயன்கள்

நெருப்பு கொண்டு சமைக்கப்படாத இயற்கையான உணவுகள் அனைத்துமே சத்துக்கள் நிறைந்த உணவு தான். இந்த இயற்கையான உணவுகளில், பழங்கள் அனைவரும் சாப்பிடக்கூடிய ஒரு சிறந்த உணவாகும். பல வகையான பழங்கள் இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சத்துகள் கொண்டதாக இருக்கின்றன. ஒரு சில பழங்கள் உடலின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து, நோய் நொடிகளை நீக்குகின்றன. பிளம்ஸ் பழம் அப்படிப்பட்ட பழ வகைகளுள் ஒன்று. பிளம்ஸ் பழத்தின் பயன்கள் என்னென்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

பிளம்ஸ் பழம் பயன்கள்

மெக்னீசியம், வைட்டமின் சி 

மனித உடல் ஆரோக்கியமாக இருக்கவும், நோய் நொடிகள் சுலபத்தில் தாக்காதவாறு இருக்க உடலுக்கு அனைத்து அத்தியாவசிய சத்துக்களும் அவசியமாகும். பிளம்ஸ் பழங்களில் வைட்டமின் சி சாது நிறைந்திருக்கிறது இது உடலின் எலும்புகளை பலப்படுத்துகிறது, இதில் இருக்கும் மெக்னீசியம் சத்து உடலின் தசைகள் மற்றும் நரம்புகளின் சீரான இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கிறது.

நார்ச்சத்து 

நம் அனைவரின் உணவிலும் நார்ச்சத்து இருப்பது மிகவும் அவசியம். நார்ச்சத்து தான் நாம் சாப்பிடும் உணவை வயிறு மற்றும் குடல்கள் சுலபமாக செரிமானம் செய்ய உதவுகிறது. இந்த பிளம்ஸ் பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு செரிமான உறுப்புகள் அனைத்தும் சீராகி, மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுப்பதிலும் சிறந்த செயலாற்றுகிறது.

போலிக் அமிலம் 

போலேட் எனப்படும் வேதிப்பொருளை உடலுக்கு தரும் பணியை போலிக் அம்னிலங்கள் செய்கின்றன. போலிக் அமிலங்கள் கர்ப்பிணி பெண்களுக்கும் அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் உடல் வளர்ச்சிற்கும் மிகவும் அவசியமானதாகும். போலிக் அமிலங்கள் நிறைந்த பிளம்ஸ் பழங்களை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வருவது நல்லது.

சிறுநீரகம் 

நமது ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சு பொருட்களையெல்லாம் வடிகட்டி சிறுநீரக உடலில் இருந்து வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்து வருகின்றன. பிளம்ஸ் அடிக்கடி சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் பலம் பெற்று அதன் செயல்பாடுகள் சிறக்கும். உடலில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தையும் சுத்திகரித்து சிறுநீர் வழியாக வெளியேற்றும். மூத்திர அடைப்பை போக்கும்

தழும்புகள் 

ரத்தக்காயங்கள் உடலில் ஏற்பட்டு அது புண்ணாக மாறி பின்பு ஆறும் போது தோலில் தழும்புகள் ஏற்படுகிறது. இப்படி காயங்கள் ஏற்பட்டு அக்காயங்கள் குணமாகி வரும் சமயங்களில் பிளம்ஸ் பழங்களை அதிகம் சாப்பிடுவதால் காயம்பட்ட இடத்தில் உள்ள திசுக்களில் அதிக ரத்த ஓட்டம் கிடைத்து, பெரிய அளவில் தழும்புகள் ஏற்படாமல் சரி செய்கிறது.

தலைமுடி 

பிளம்ஸ் பழங்கள் தலைமுடிக்கு பல வகைகளில் நன்மைகளை புரிகிறது. இந்த பழங்களில் தலைமுடி உதிர்வை தடுக்கும் வைட்டமின் ஏ சத்துகள் அதிகம் உள்ளதால் முடிகொட்டுவதை தடுக்கிறது. பொடுகு போன்றவை தலையில் உருவாகாமலும் தடுக்கிறது. தலைமுடிகளின் அடர்த்தியும் கூடுகிறது. இளம் வயதிலேயே தலைமுடி நரைக்கும் பிரச்சனையையும் போக்குகிறது.

உடல் எடை 

அதிக உடல் எடை பல வித உடல் உபாதைகளுக்கு வழி வகுக்கிறது. உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் பல வகையான நன்மை தரும் உணவுகளை உட்கொள்ளும் போது பிளம்ஸ் பலன்களையும் சேர்த்து சாப்பிடுவது நல்லது. உடலில் இருக்கும் செல்களின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பதால் உடலில் கொழுப்புகள் அதிகம் சேராமல் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவுகிறது.

ரத்தம் 

பிளம்ஸ் பழங்களில் இருக்கும் வைட்டமின் சி சத்து நமது உடலில் இருக்கும் ரத்தத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இந்த பழத்திலுள்ள வைட்டமின் சத்து ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லட்ஸ் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கிறது. உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ரத்தம் சீராக சென்று வரும் வகையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

ஆஸ்டியோபொரோசிஸ் 

ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகள் வலுவிழந்து தேய்மானம் அடையும் ஒரு நோயாகும். இது பெரும்பாலும் மாதவிலக்கு முற்றிலும் நின்ற ஐம்பது வயதிற்கு மேற்பட்ட அதிகம் பெண்களையே தாக்குகிறது. பிளம்ஸ் பழத்தில் “பிளவினாய்ட்ஸ்” எனும் வேதிப்பொருள் அதிகம் நிறைந்துள்ளது இது பெண்களுக்கு ஆஸ்டியோபொரோசிஸ் நோய் ஏற்படும் வாய்ப்புகளை வெகுவாக குறைகிறது.

பதட்டம் 

தேவையற்ற கவலைகள் மற்றும் கற்பனையான எதிர்பார்ப்புகளால் சிலரின் மனதில் பயம் அதிகரித்து பதட்டமும், படபடப்பு தன்மையும் அதிகம் ஏற்படுகிறது. பிளம்ஸ் பழங்களில் மூளை செல்கள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் இறுக்கம், அழுத்தம் போன்றவற்றை குறைத்து மனதில் ஏற்படும் வீணான பதட்டத்தை குறைக்கிறது.