Skip to main content

மாதவிடாய் வலி நீங்க பாட்டி வைத்தியம்

மாதவிடாய் வலி நீங்க பாட்டி வைத்தியம்

தாய்மை என்பது பெண்களுக்கே உரிய ஒரு வரப்பிரசாதமாகும். இந்த தாய்மை பேற்றை ஒரு பெண் அடைய ஒவ்வொரு மாதமும் அப்பெண்ணின் கருப்பையில் கருமுட்டைகள் உருவாகி, அது கருவடையாத பட்சத்தில் மாதமொரு முறை வெளியேறுவதை மாதவிடாய் என்கின்றனர். இக்காலத்தில் சில பெண்களுக்கு அடிவயிறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான வலி தோன்றும். இதற்கான காரணம் மற்றும் இதை போக்குவதற்கான வீட்டு மருத்துவ முறைகளை தெரிந்து கொள்வோம்.

Period pain

மாத விடாய் வலி காரணங்கள்

இந்த பிரச்சனைக்கு இது தான் காரணம் என எந்த மருத்துவராலும் கூற முடியவில்லை என்றாலும் ஹார்மோன்களின் அதீத உற்பத்தி, 20 வயதிற்கு கீழாக இருக்கும் பெண்களின் உடல் தன்மை, கர்ப்பப்பையில் இருக்கும் திசுக்களின் அதீத வளர்ச்சி போன்றவை காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

மாதவிடாய் வலி அறிகுறிகள்

அடிவயிற்று பகுதில் அதீத வலியிருக்கும். இந்த வலி இடுப்பு மற்றும் கால்களுக்கு பரவும். ஒரு சில பெண்களுக்கு குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படலாம். மனதில் ஒரு அமைதியின்மை இருக்கும்.

period pain

மாதவிடாய் வலி நீங்க பாட்டி வைத்தியம்

வெந்தயம்

நாம் உண்ணும் அன்றாட உணவுகளில் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு பொருள் வெந்தயம் ஆகும். இந்த வெந்தயத்திற்கு பல்வேறு உடற்குறைகளை போக்கும் ஆற்றல் இருக்கிறது. குறிப்பாக வயிறு சம்பந்தமான குறைபாடுகளை நீக்க வல்லது. மாதவிடாய் கால வலியால் அவதிப்படும் பெண்கள் தினசரி உணவில் வெந்தயம் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இரவில் வெந்தயத்தை சிறிது முழுங்கி இதமான வெந்நீரை குடிக்க வலி கட்டுப்படும்.

vendhaya podi

புதினாகீரை

கீரை வகைகளில் உடலுக்கு தேவையான பல அவசிய சத்துக்களை கொண்டது புதினா கீரை. உடலுக்கு குளிர்ச்சியை தரவல்லது. இந்த புதினா இலைகள் சிலவற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டும். புதினாவை சாறாக பிழிந்து அருந்தினாலும் மாதவிடாய் வலி குறையும்.

Mint leaf(puthina)

ஏலக்காய்

பலவகையான உடல் பாதிப்புகளுக்கு பாரம்பரிய மருத்துவத்தில் ஏலக்காய் பயன்படுத்தபடுகிறது. இந்த ஏலக்காய்கள் சிலவற்றை நன்கு பொடி செய்து கொண்டு பசும்பாலில் கலந்து அருந்தி வர மாதவிடாய் கால வலி குறையும். இந்த ஏலக்காய்களை அவ்வப்போது பச்சையாக வாயில் போட்டு மெல்லுவதும் சிறந்த நிவாரணத்தை கொடுக்கும்.

Elakkai

இஞ்சி

இஞ்சி உடலில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் அமிலத்தன்மை மிக்க ஒரு உணவு பொருளாகும். மாதவிடாய் வலி தீர இந்த இஞ்சியை சிறிது எடுத்து நீரில் போட்டு காய்ச்சி, அதை வலி மிகுந்த நேரங்களில் அவ்வப்போது சிறிது பருகி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். ஆனால் இதை அதிகம் பருக கூடாது.

Ginger - Inji

நீர்ச்சத்துள்ள காய்கள் மற்றும் பழங்கள்

நீர்சத்துகள் அதிகமுள்ள முட்டைகோஸ், வெள்ளரிக்காய், முள்ளங்கி, தர்பூசணி ஆப்பிள் போன்ற காய்கள் மற்றும் பழங்களை இக்காலங்களில் உண்பது மாதவிடாய் வலியினை குறைக்கும்.

water melon

பருப்புகள்

ஆக்ரூட், பாதம், பிஸ்தா போன்ற பருப்புகள் பல அத்தியாவசிய சத்துக்களை கொண்டது இவற்றை உண்பதால் மாதவிடாய் வலியை குறைப்பது மட்டுமின்றி, அக்காலத்தில் உடல் இழந்த சக்தியை மீண்டும் பெற உதவும்.

badham

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய் உஷ்ணத்தை போக்கி குளிர்ச்சியை தர வல்லது. இந்த விளக்கெண்ணையை சிறிது எடுத்து கொண்டு தொப்புள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேய்த்து வர சூதக வலி எனப்படும் மாதவிடாய் வலி குறையும்.