கால் வீக்கம் குணமாக பாட்டி வைத்தியம்
மனிதர்களாகிய நாம் இயங்குவதற்கும் ஒரு இடத்திலிருந்து இன்னோரு இடத்திற்கு நடப்பதற்கும் உதவும் உடலின் அங்கங்கள் கால்கள். இகால்களில் எவ்வித பாதிப்புகளும் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். இந்த கால்களில் ஏற்படும் ஒரு குறைபாடு தான் கால் வீக்கம் ஆகும். இக்கால்வீக்கத்திற்கான காரணம் மற்றும் சித்த மருத்துவ குறிப்புகளை அறிந்து கொள்ளலாம்.
கால் வீக்கம் ஏற்பட காரணம்
கால் வீக்கம் ஏற்பட ஒரு முதன்மை காரணமாக இருப்பது சிறுநீரகங்களில் ஏற்படும் கோளாறுகள் ஆகும். இப்பிரச்னையால் அவதியுறுபவர்களுக்கு அவ்வப்போது கால்களில் வீக்கம் ஏற்படும். வயதின் மூப்பின் காரணமாகவும் சிலருக்கு கால் வீக்கம் ஏற்படும்.
கால் வீக்கம் குறைய ஆவாரம் பட்டை, சுக்கு
ஆவாரம் பூ, மரப்பட்டை போன்றவை சிறந்த மருத்துவ குணங்களை கொண்டவையாகும். இந்த ஆவாரம் பட்டையுடன் சுக்கு சிறிது சேர்த்து, தண்ணீர் விட்டு காய்ச்சி குடிக்க கால் வீக்கம் குணமாகும்.
கால் வீக்கம் குணமாக – ஓமம்
ஓமத்தை தண்ணீர் விட்டு அரைத்து, சூடான நீரில் கலந்து வீக்கமுள்ள இடங்களில் பற்று போட்டு வர கால் வீக்கம் குணமாகும்.
கால் வீக்கம் குறைய வெற்றிலை
ஒரு வெற்றிலையை எடுத்து அதில் விளக்கெண்ணெய் தடவி, நெய் தீபத்தின் தணலில் காட்டி, கால் வீக்கம் உள்ள இடங்களில் அவ்வப்போது வைத்து வர கால் வீக்கம் குறையும்.
ஒத்தடம்
வெறும் வாணலியை சூடேற்றி ஒரு வெள்ளை துணியில் சிறிது மஞ்சளை தடவி, அந்த வாணலியில் வைத்து வீக்கமுள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்து வர சிறந்த நிவாரணம் கிடைக்கும்.
உடற்பயிற்சி
நீண்ட நேரம் ஒரே இடத்தில் உடலியக்கமின்றி இருப்பதாலும் கால்களில் வீக்கம் ஏற்படும். எனவே அவ்வப்போது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.