Advertisement

சப்போட்டாவின் பயன்கள்

சப்போட்டாவின் பயன்கள்

இயற்கையாக கிடைக்கும் பழ வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே நம் ஆரோக்கியத்திற்கு எந்தவகையான குறையும் ஏற்படாது. அதிலும் சில வகை பழங்களில் உள்ள சத்துக்கள் நம் உடலில் ஏற்படும் பலவகையான பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. இந்த பட்டியலில் சப்போட்டா பழமும் அடங்கும். இனிப்பான சுவையையும், அழகான தோற்றத்தையும் கொண்ட இந்த சப்போட்டா பழத்தின் பயன்களை பற்றி இந்தப் பதிவின் மூலம் சற்று விரிவாக காண்போமா.

sapotta

சப்போட்டாவில் குளுக்கோஸ் சத்தானது அதிக அளவு இருப்பதால் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. அதுமட்டுமல்லாமல் இதில் உள்ள வைட்டமின் சத்துக்கள் ரத்த நாளங்களை சீராக வைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை தடுக்கும் சக்தி இதற்கு உண்டு.

கொலஸ்ட்ராலை குறைக்க

நம் உடலில் இருக்கும் கொழுப்பு சத்தை குறைப்பதற்கு சப்போட்டா பழம் ஒரு இயற்கை மருந்தாக உள்ளது. தினந்தோறும் இரண்டு சப்போட்டா பழங்களை சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தமான பாதிப்புகள் நீங்கும்.

sapotta

ஆரம்பநிலை காசநோய் குணமடைய

காச நோயினால் பாதிக்கப்பட்ட ஆரம்ப காலத்திலேயே தினம்தோறும் சப்போட்டா பழ சாருடன், ஒரு நேந்திரன் பழமும் சாப்பிட்டு வந்தால் காச நோய் சில நாட்களில் குணமடையும்.

சீதபேதி குணமாக

உடல் உஷ்ணம் ஏற்படும் சமயத்தில் ரத்தத்துடன் கலந்த பேதி உண்டாகும். இதனை சரிசெய்ய சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்து மூன்று நாட்கள் தொடர்ந்து பருகி வர வேண்டும். இப்படி செய்து வந்தால் உடல் உஷ்ணமானது குறைந்து சீதபேதி நிற்கும்.

sapotta

பித்தம் நீங்க

சிலருக்கு பித்தத்தினால் அடிக்கடி தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதனை நீக்க சப்போட்டா பழத்தை சாப்பிட்டு பின்னர் ஒரு ஸ்பூன் சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் நீங்கும்.

சாதாரண காய்ச்சல் குணமாக

சப்போட்டா பழச்சாறை குடித்துவிட்டு, சிறிது சுக்கு, சித்தரத்தை பொடி, கொஞ்சம் கருப்பட்டி, இவைகளை ஒன்றாக சேர்த்து பொடியாக்கி தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்சி குடித்துவர சாதாரண காய்ச்சல் குணமாகும்.

sapotta

சளி பிரச்சனை நீங்க

சப்போட்டா பழத்துடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து பருகினால் சளி குணமாகும். நாளடைவில் இருமல் தொல்லையிலிருந்தும் விடுபடலாம்.

கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பெற

ஒல்லியான தேகத்தை உடையவர்கள் நல்ல கட்டுக்கோப்பான உடலை பெற சப்போட்டா கொட்டைதூள், தோல் நீக்கிய சப்போட்டா பழத்துடன் 4 டீஸ்பூன் பால் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த விழுதுடன் ஒரு ஸ்பூன் வெள்ளரி விதை பவுடரை சேர்த்து குளிப்பதற்கு முன்பு முழங்கை, முழங்கால், விரல் போன்ற பகுதிகளில் நன்றாக மசாஜ் செய்துவிட்டு பின்பு குளித்தால் பொலிவு கிடைப்பதோடு கட்டுக்கோப்பான உடலையும் பெறமுடியும்.

sapotta

சரும சுருக்கங்கள் நீங்க

சப்போட்டா பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் தோலின் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது. சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நாம் நீண்ட நாட்களுக்கு இளமையான தோற்றத்தை பெறலாம்.

முடி உதிர்வதை தடுக்க

ஒரு கப் நல்லெண்ணெயுடன், கால் ஸ்பூன் மிளகுத் தூள், ஒரு ஸ்பூன் சப்போட்டா விதை பவுடர் இவைகளை சேர்த்து அடுப்பில் வைத்து பொறுக்கும் சூட்டில் காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை பஞ்சில் நனைத்து தலைமுடியின் வேர்களிலும், மண்டைப்பகுதியிலும் படும்படி அரைமணிநேரம் மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு கடலை மாவு, சீயக்காய் சேர்த்து தலையை நன்றாக தேய்த்து குளித்து விட வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை, இப்படி ஒரு மாதம் தொடர்ந்து செய்து வர முடி உதிர்வு முற்றிலுமாக நிறுத்தப்படும்.

 sapotta

பொடுகு தொல்லை நீங்க

சப்போட்டா விதைகளை விழுது போல நன்றாக அரைத்து அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து பின்பு இரவில் படுக்கும் போது மண்டையோட்டில் நன்றாக படும்படி தேய்த்து பின்பு மறுநாள் காலையில் தலைக்கு குளித்து விட வேண்டும். இது தலைமுடிக்கு மென்மையை தருவதோடு பொடுகையும் நீக்கும்.

கூர்மையான கண் பார்வைக்கு

சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் வயது முதிர்ந்த காலத்திலும் நல்ல கண் பார்வையை பெறலாம். இதிலுள்ள வைட்டமின் ஏ சத்தானது நம் கண்களை ஆரோக்கியமாக வைப்பதோடு கண்பார்வையை குறையாமல் பார்த்துக் கொள்கிறது.

sapotta

ஆரோக்கியமான எலும்புகள் பெற

கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் இந்த சப்போட்டாவில் அதிக அளவு உள்ளது. இந்த சத்துக்களின் குறைபாட்டின் காரணமாக நம் எலும்புகளானது ஆற்றலை இழக்கின்றது. சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் சக்தி அதிகரிக்கப்பட்டு எலும்புகள் வலுவடைகிறது.

மலச்சிக்கல் நீங்க

சப்போட்டாவின் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இது உடலின் குடல் ஆரோக்கியத்தை அதிகரித்து உடலை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. நம் குடலானது ஆரோக்கியமாக செயல்படும் போது மலச்சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

 sapotta

கர்ப்பிணி பெண்களுக்கு

சப்போட்டாவில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் மற்ற சத்துக்கள் அதிகளவு உள்ளதால் கர்ப்பிணிப் பெண்களும், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களும் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பலவீனம், குமட்டல், மயக்கம் போன்ற பிரச்சனைகள் இந்த பழத்தினை சாப்பிட்டு வந்தால் நீங்கும்.

ரத்தக்கசிவை உடனடியாக தடுக்கும்

நமக்கு எதிர்பாராமல் காயம் ஏற்பட்டாலோ அல்லது புண்கள் ஏற்பட்டாலும் அதிலிருந்து இரத்தப் போக்கானது நிற்காமல் வந்து கொண்டே இருக்கும். இந்த ரத்தக் கசிவினை உடனடியாக நிறுத்தும் சக்தியானது சப்போட்டாவிற்கு உள்ளது. சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நம் உடலிற்கு இயற்கையாகவே ரத்தத்தை உறையவைக்கும் சக்தி வந்துவிடும்.

 sapotta

மன அழுத்தம் நீங்க

நம் உடலில் இருக்கும் நரம்புகளை அமைதிப்படுத்தும் தன்மையானது சப்போடாவிற்க்கு உள்ளது. இந்த சப்போட்டாவை தொடர்ந்து உண்டு வந்தால் தூக்கமின்மை, பதட்டம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.

சிறுநீரக கற்கள் வெளியேற

சப்போட்டா பழத்தின் நொறுக்கப்பட்ட விதைகளை சாப்பிட்டு வருவதால் சிறுநீர் அதிகமாக வெளியேறும். இதன் மூலம் சிறுநீர் பையில் இருந்து கற்கள் தடையின்றி வெளியேறிவிடும். இதன் மூலம் சிறுநீரக பிரச்சனைகளிலிருந்தும் நம்மை காத்துக் கொள்ளலாம்.