Skip to main content

இதயத்தின் செயல்திறன் அதிகரிக்க சக்ராசனம் செய்து பாருங்கள்.

இதயத்தின் செயல்திறன் அதிகரிக்க சக்ராசனம் செய்து பாருங்கள்.

சக்ராசனத்தால் ஏற்படும் பயன்கள்

நம் உடலை சக்கரம் போல வளைத்து செய்யும் பயிற்சியை தான் சக்கராசனம் என்று கூறுகின்றனர். சமஸ்கிருதத்தில் ‘சக்கரா’ என்றால் சக்கரத்தை குறிக்கிறது. ‘ஆசனம்’ என்றால் இருக்கும் நிலையை குறிக்கிறது. நம் உடம்பை பின்புறமாக வளைத்து செய்யப்படும் பயிற்சியை தான் சக்கராசனம் என்று கூறுகின்றோம்.

 Chakrasana

செய்முறை

முதலில் கால்களை நேராக வைத்து முதுகை வளைக்காமல் நிமிர்ந்து நிற்க வேண்டும். அடுத்து மெதுவாக கைகளை மேலே தூக்கி பின் பக்கம் வளைத்தபடி முயற்சி செய்யவும். எவ்வளவு அளவிற்கு உங்களால் முடியுமோ அதுவரை வளைத்தால் போதும். கைகளை மடக்காமல் நீண்ட படியே இருக்க வேண்டும். இப்படி உங்களின் உடலை, கால்கள் தாங்கும் அளவிற்கு அழுத்தமாக பாதங்களை தரையில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் சில நொடிகள் இருந்து பின்பு மெதுவாக பழைய இயல்பு  நிலைக்கு வரவும். இப்படி தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தால் முழுமையான சக்கர ஆசனத்தை செய்துவிடமுடியும்.

இதயத்திற்கு

உங்கள் இதயத்தின் செயல்திறன் அதிகரிக்கப்பட்டு இதய நோய்கள் குணமாவதுடன், உங்கள் மனதில் ஆன்மீக சக்தியை ஊக்குவிக்கிறது. இந்த பயிற்சியினை நீங்கள் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் மற்றவர்களிடம் அன்பு கொண்டவர்களாகவும், இறக்கம் உடையவர்களாகவும் மாறி வருவீர்கள். உங்கள் இதயமானது சரியான நிலையில் இயங்கும் போது உங்கள் வாழ்க்கையும் இனிமையானதாக இருக்கும்.

 Chakrasana

நரம்பு மண்டலத்தை சீராக வைக்கிறது

சக்ராசனம் தொடர்ந்து செய்யப்படும் போது பாராஸிம்பதிக் என்ற நரம்பு மண்டலம் தூண்டப்படுகிறது. இதனால் மனச்சோர்வு, பதட்டம், மன அழுத்தம் இவைகள் குறைக்கப்படுகின்றன. இதனால் நம் மனதானது நிம்மதி அடைந்து நரம்பு மண்டலங்களை சீராக வைக்கிறது. இதன மூலம் நாம் ஆரோக்கியமாக வாழலாம்.


உடல் உற்சாகத்திற்கு

இந்த ஆசனமானது இயற்கையாகவே உங்கள் உடலுக்கும் மனதிற்கும் உற்சாகத்தை அளிக்கிறது. நீங்கள் செயல்படும் வேலையில் தொடர்ந்து உற்சாகத்துடன் ஈடுபடுவதை உங்களாலேயே உணர முடியும். நுரையீரலுக்கு அதிகமாக ஆக்ஸிஜன் கொடுக்கிறது. கண் பார்வை கூர்மையாக்கப்படுகிறது.

 Chakrasana

தைராய்டு சுரப்பிகளை தூண்டுகிறது

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் தைராய்டு சுரப்பி சீராக சுரக்கப்பட்டு, தைராய்டு நோயானது சரி செய்யப்படுகிறது.

முதுகெலும்பிற்கு

இந்த ஆசனமானது முதுகெலும்பை வலுப்படுத்தி எலும்பு தேய்மானத்திலிருந்து பாதுகாக்கிறது. முதுகெலும்பின் வளையும் தன்மையானது அதிகரிக்கப்படுகிறது. ஒரு நாள் முழுவதும் உட்கார்ந்தபடியே வேலை செய்வதால் ஏற்படும் மோசமான விளைவுகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

backbonepain

நுரையீரல் ஆரோக்கியத்திற்கு

நம் நுரையீரலை பலப்படுத்தும் ஒரு சக்தி இந்த ஆசனத்திற்கு உண்டு. நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்தி சுவாசத்தை சரி படுத்துகிறது. மூச்சினை இழுத்து உள்வாங்கி வெளியேற்றும் இந்த பயிற்சி ஆஸ்துமா நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

உடல் எடையை குறைக்க

நம் அடி வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பை குறைத்து தொப்பை வராமல் தடுக்கிறது. நம் உடலின் செரிமானத்தையும், இனப்பெருக்க உறுப்பின் செயல்பாட்டையும் கட்டுப்படுத்துகிறது. தவறாமல் பயிற்சியினை செய்து வரும்போது அழகான தோற்றத்தை பெறலாம்.

Charasana

நெகிழ்வான இடுப்புப்பகுதி

வளைந்து, நெளியும் இடுப்பு பகுதியின் முக்கியத்துவத்தை விளையாட்டு வீரர்கள் அறிந்திருப்பார்கள். விளையாட்டு வீரர்களுக்கு இந்த ஆசனம் மிகவும் உதவியாக இருக்கும். இடுப்பு மற்றும் கீழ் முதுகை வலிமையாக்க இந்த ஆசனம் மிகவும் உபயோகமாக உள்ளது.

முளை

நம் மூளையின் செயல்பாட்டினை தூண்டி புத்துணர்ச்சி அடையச் செய்கிறது. கைகள் மற்றும் காலின் தசைகளை வலுவடையச் செய்கிறது.

Charasana

பெண்களுக்கு

பெண்களுக்கான கருப்பை பிரச்சினைகளையும், மாதவிடாய் சமயங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்கினை இது சரி செய்கிறது.

Comments