Advertisement

உருளைக்கிழங்கு அதிகம் உண்பதால் ஏற்படும் அற்புதமான நன்மைகள் என்ன தெரியுமா?

உருளைக்கிழங்கு அதிகம் உண்பதால் ஏற்படும் அற்புதமான நன்மைகள் என்ன தெரியுமா?

உலகின் அனைத்து நாட்டு மக்களாலும் விரும்பி உண்ணப்படுகின்றன பிரதான 10 உணவு வகைகளில் உருளைக்கிழங்கு இடம்பெறுகிறது. உருளைக் கிழங்கு பூமிக்கடியில் விளைகின்ற ஒரு கிழங்கு வகை ஆகும். இது தென் அமெரிக்க கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பயிர்வகை. பிற்காலத்தில் காலனி ஆதிக்க நாட்டின் வியாபாரிகளால் உலகெங்கிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து அப்படியே சாப்பிட்டாலே பசியை போக்க வல்ல ஒரு உணவாக இருக்கிறது. இந்த உருளைக்கிழங்கு உலக மக்கள் அனைவரின் வரவேற்பை பெற்ற ஒரு உணவாக இருக்கிறது. உருளைக்கிழங்கை அதிகம் சாப்பிடுவதால் நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

potato-urulai

உருளைக்கிழங்கு பயன்கள்

குழந்தைகள் உணவு 

அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது. உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும். அதிக சக்தியை அளிக்கக் கூடிய உணவாகவும் அதே நேரத்தில் சுலபமாக செரிமானம் ஆகக்கூடிய ஒரு உணவு வகையாக உருளை கிழங்கு கருதப்படுகிறது. எனவே தான் கடினமான உணவுகளை செரிமானம் செய்ய முடியாத நிலையில் இருக்கும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு உருளைக்கிழங்கு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதே நேரம் ஒரே நாளில் அதிக அளவில் உருளைக்கிழங்கு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறுகின்றனர். காரணம் உருளைக்கிழங்கு அதிகம் சாப்பிடும்போது வாயுத் தொந்தரவுகளை ஏற்படுத்தக்கூடும்.

நார்ச்சத்து 

நார்ச்சத்து அதிகம் நிறைந்த ஒரு கிழங்கு வகையாக உருளைக்கிழங்கு இருக்கிறது. அடிக்கடி உருளைக்கிழங்கு சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் நார்ச்சத்துக்கள் உடலால்ஏற்றுக் கொள்ளப்பட்டு செரிமான உறுப்புகளின் சீரான இயக்கத்தைத் சரி செய்து, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் உடலில் ஏற்படுகின்ற குடற்புற்று செல்களின் உற்பத்தி அதிகரிக்காமல் முற்றிலும் தடுக்கிறது. ரத்தத்தில் அதிக அளவு கொலஸ்ட்ரால் படிவதைத் தடுத்து இதய நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.

potato-urulai

முக அழகு கூட 

முகம் மற்றும் உடலின் இதர பகுதிகளில் இருக்கும் சருமத்திற்கு பல வகைகளில் பேருதவியாக உருளைக்கிழங்கு இருக்கிறது. உருளைக்கிழங்கை வேக வைத்து, நன்கு பசைபோல் அரைத்து பசும்பாலில் கலந்து, முகத்தில் தடவிக் கொண்டு ஒரு மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகத்தில் இருக்கின்ற எண்ணெய் பசைகள் நீங்குகிறது. முகப்பருக்கள், கரும்புள்ளிகள் ஏற்படுவதை முற்றிலும் தடுத்து முக அழகை கூட்டுகிறது. முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுத்து இளமைத் தோற்றத்தை அதிகரிக்கிறது. தோல் கடினமாக மாறுவதை தடுத்து ஈரப்பத தன்மையுடனும், மிருதுவாகவும் இருக்குமாறு செய்கிறது.

ஸ்கர்வி நோய் தடுப்பு 

உருளைக்கிழங்கில் வைட்டமின் சி மற்றும் கரோட்டின் சத்துக்கள் அதிகம் இருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்திருக்கின்றன. இந்த வைட்டமின் சி சத்து, குழந்தைகளிடம் அதிகம் காணப்படும் ஸ்கர்வி நோய் ஏற்படாமல் தடுக்கிறது. எனவே தான் இந்த வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்த உருளைக்கிழங்குகளை சிறு குழந்தைகள் அடிக்கடி சாப்பிடக் கொடுப்பதால் அவர்களுக்கு ஸ்கர்வி நோய் ஏற்படும் ஆபத்து வெகுவாகக் குறைவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

potato-urulai

ரத்த அழுத்தம் தீர 

ஊட்டச்சத்து இல்லாத உணவு, மன அழுத்தம், அதிக உடல் எடை, செரிமான கோளாறுகள், நீரிழிவு நோய் ஆகிய அனைத்தும் ரத்த அழுத்த பிரச்சனைக்கு வழி வகை செய்யும் குறைபாடுகளாக இருக்கிறது. உருளைக்கிழங்கில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. நார்ச்சத்து ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. அதேநேரம் பொட்டாசியம் ரத்தத்தில் பிராணவாயு கிரகிக்கும் தன்மையை அதிகரித்து உயர் ரத்த அழுத்தம் போன்ற குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. எனவே ரத்த அழுத்த குறைபாடு இருப்பவர்கள் சீரான அளவில் உருளைக்கிழங்கை சாப்பிட்டு வருவது நலம் பயக்கும் என மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது.

மூளை செயல்பாடுகள் சிறக்க 

மனிதர்களின் மூளை சுறுசுறுப்பாக இயங்க உடலில் உற்பத்தியாகும் குளுக்கோஸ் சர்க்கரை சத்துக்களை அடிப்படையாக கொண்டிருக்கிறது. மேலும் அமினோ அமிலங்கள் மற்றும் ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், அதிக அளவு பிராண வாயு போன்ற காரணிகளும் மூளையின் சீரான இயக்கத்திற்கு அடிப்படைக் காரணிகளாக இருக்கிறது. மேற்கூறிய அனைத்து அத்தியாவசிய சத்துக்களை உருளைக்கிழங்கு கொண்டிருக்கிறது. உருளைக்கிழங்கை அதிகம் சாப்பிடும் நபர்களுக்கு கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச் சத்து ரத்தத்தில் கிடைக்கப் பெற்று உடல் மற்றும் மனச்சோர்வை போக்கி, மூளையை மேலும் சுறுசுறுப்படையச் செய்கிறது.

potato-urulai

சிறுநீரக கற்கள் கரைய

தினந்தோறும் சாப்பிடும் உணவுகளில் அதிக அளவு யூரிக் அமிலங்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிர்காலங்களில் சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. உருளை கிழக்கிலும் சிறுநீரக கற்களை உருவாக்கும் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து இருந்தாலும், அந்த கால்சிய சத்துகளை கரைக்கக்கூடிய மக்னீசிய சத்துகளும் அதிகம் இருப்பதால் சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்க நினைப்பவர்கள், ஏற்கனவே சிறுநீரகக் கற்கள் ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் அவ்வப்போது சரியான அளவில் உருளைக்கிழங்குகளை வந்தால் வெகு விரைவில் அவர்கள் சிறுநீரகத்தில் உருவாகியிருக்கும் சிறுநீரகக் கற்களைக் கரைத்து, அவற்றை சிறுநீர் வழியாக வெளியேற்றி விடுகிறது.

புற்று நோய்களை தடுக்க

நெடுங்காலமாக மனித இனத்தை பல வகையான புற்று நோய்கள் அச்சுறுத்தி வந்திருக்கின்றன. ஆனால் இந்த நூற்றாண்டில் உலகின் அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் பல்வேறு வகையான புற்று நோய்கள் ஏற்படுகின்ற.

புற்று நோயை தடுக்கக்கூடிய சக்தி கொண்ட உணவுகளில் ஒன்றாக உருளைக்கிழங்கு இருக்கிறது. வைட்டமின் சி சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் அதிகம் உள்ளன. மேலும் சியாசாந்தின் மற்றும் கரோட்டின் சத்துகளும் இருக்கின்றது. இந்த சத்துக்கள் நமது ரத்தத்தில் உருவாகும் ஃப்ரீ ரேடிக்கல்களை அணுக்களை உருவாகாமல் தடுத்து, புற்றுநோய் ஏற்படாமல் காக்கிறது என மேலை நாடுகளில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்திருக்கின்றன.

potato-urulai

உடல் எடை கூட 

உருளைக்கிழங்குகள் அதிக அளவு கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் பெற்றிருக்கின்றன. அதே நேரம் மிகக் குறைந்த அளவிலேயே கொழுப்பு சத்துக்களை கொண்டதாக இருக்கின்றன. இத்தகைய உருளைக்கிழங்குகள் பாலாடைக்கட்டி, வெண்ணை சேர்த்து சமைக்கப்பட்டு உண்ணப்படும் போது மனிதர்கள் குறுகிய காலத்திலேயே உடல் எடை அதிகரித்து ஆரோக்கியமான நிலையை அடைவார்கள். உருளைக்கிழங்கில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் விட்டமின் சி சத்துக்கள் ஆகியவை இருக்கின்றன. உடலில் கார்போஹைட்ரேட் சத்துக்களை அதிகம் தந்து விரைவில் உடல் மற்றும் மன சோர்வு ஏற்படாமல் தடுக்கிறது. எனவே தான் விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் உருளைக்கிழங்குகளை சாப்பிட அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதயம்

மனித இதயம் சீராக செயல்படுவதற்கு பொட்டாசியம் சத்து ஒரு அவசியத் தேவையாக இருக்கிறது. உருளைக்கிழங்கில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இந்த பொட்டாசியம் உடலில் இருக்கும் நரம்புகளில் இறுக்கத்தன்மை ஏற்படாமல் தடுக்கிறது. இதய நலத்திற்கும் பொட்டாசியம் சத்து மிகவும் அவசியமாகிறது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர உருளைக்கிழங்கில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது. இதயம் ஆரோக்கியமாக இயங்கவும், இதய நோய்கள் வராமல் தடுக்கவும் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறை உருளைக்கிழங்குகள் உணவுகளை சாப்பிடுவது நன்மையை ஏற்படுத்தும்.