Advertisement

தினமும் வாழை இலைகளில் உணவு சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

தினமும் வாழை இலைகளில் உணவு சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

நமது முன்னோர்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் அதில் பல அறிவியல் பூர்வமான உண்மைகளும், மனிதகுலத்திற்கு நன்மை தரும் வகையிலும் இருக்கும். பழங்காலம் தொட்டே நமது நாட்டின் சமையலில் மரங்கள், செடிகளிலிருந்து கிடைக்கும் காய்கள், கனிகள் போன்றவற்றை மட்டுமல்லாது அவற்றின் வேர், விதைகள், இலைகள் போன்றவற்றையும் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளனர். நமது பழந்தமிழ் இலக்கியங்களில் தெய்வீக மரங்களில் ஒன்றாக வாழை மரம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த வாழை மரத்தில் இருந்து கிடைக்கின்ற வாழை இலைகளை நம் முன்னோர்கள் உணவு சாப்பிட பயன்படுத்தி வந்தனர். அப்படியான அந்த வாழை இலைகளில் உணவு சாப்பிடுவதால் நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

banana-leaf

வாழை இலை பயன்கள்

கிருமி நாசினி 

நாம் சாப்பிடுகின்ற உணவில் தீங்கு விளைவிக்கும் நுண்ணிய கிருமிகள் தொற்றிக் கொள்வதால் உணவு நச்சுத் தன்மை அடைந்து, நமக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. வாழை இலையில் உணவை போட்டு சாப்பிடுவதால், வாழை இலையில் இருக்கின்ற கிருமிநாசினி வஸ்துக்கள் உணவில் இருக்கின்றநீயே கிருமிகளை அழித்து, நோய்களின் பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாத்து, உடல்நலத்தை மேம்படுத்துகிறது.

வயிற்று புண்கள் 

நீண்ட காலமாக அலுமினியம் உலோகத்தை பயன்படுத்தி செய்யப்பட்ட பாத்திரங்களில் உணவை சமைப்பது, சாப்பிடுவது போன்றவற்றை செய்வதால் பலருக்கு வயிறு சம்பந்தமான நோய்கள், குறைபாடுகள் ஏற்படுகின்றன. உணவை வாழை இலையில் வைத்து சாப்பிடும் போது, வாழை இலையில் இருக்கின்ற குளோரோஃபில் எனும் வேதிப்பொருள், நாம் சாப்பிடும் உணவை நன்கு செரிமானம் செய்ய உதவுகிறது. மேலும் வயிறு மற்றும் குடல் பகுதிகளில் இருக்கின்ற புண்களையும் ஆற்றுகிறது.

banana-leaf

பசி உணர்வு 

மன அழுத்தங்கள் அதிகம் இருக்கும் நபர்களுக்கும், உடலில் ஏற்படும் சத்துக் குறைபாடுகள் காரணமாகவும் ஒரு சிலருக்கு பசி உணர்வே இல்லாமல் போகிறது. வாழையிலையில் அடிக்கடி உணவு சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பசி உணர்வு நன்கு தூண்டப்பட்டு, நன்றாக சாப்பிடும் நிலை ஏற்படுகிறது. சாப்பிடப்படும் எப்படிப்பட்ட ஒரு உணவுப் பொருட்களும் சுலபமாக செரிமானம் ஆகவும் வழிவகை செய்கிறது.

நீண்ட ஆயுள் 

இக்காலத்தில் நாம் உணவு சாப்பிடும் தட்டுக்கள் போன்றவை பல ரசாயன முறைகளில் தயாரிக்கப்படுகின்றன. இந்த தட்டுக்கள் நெடுநாட்களாக சாப்பிடுபவர்களுக்கு உடலில் சிறிய அளவில் குறைபாடுகள் ஏற்படலாம். அக்காலத்தில் நம் முன்னோர்கள் தினமும் வாழை இலையில் சாப்பிட்டதால் உடலில் எவ்விதமான நோய்களுமின்றி நீண்ட காலம் வாழ்ந்தனர். எனவே தினமும் வாழையிலையில் உணவு சாப்பிடுபவர்களுக்கு நீண்ட ஆயுளும், சுலபத்தில் நோய் ஏற்படாத தன்மையும் உருவாகும்.

banana-leaf

சரும நலம் 

வயது செல்லச் செல்ல அனைவருக்குமே தோலில் ஈரப்பதம் குறைந்து, வறட்சி தன்மை ஏற்பட்டு, தோலில் சுருக்கங்கள் உண்டாகி வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். தினந்தோறும் மூன்று வேளையும் வாழை இலையில் உணவு சாப்பிடுபவர்களுக்கு தோலில் நீர் வறட்சி ஏற்படாமல், பளபளப்புத் தன்மை காக்கப்பட்டு, தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுத்து, எப்போதும் இளமை தோற்றத்தை உண்டாக்குகிறது.

உணவு சத்துகள் 

வேலைக்கு செல்பவர்கள் மதிய உணவை உலோகம் மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்களில் எடுத்துச் செல்வதால் உணவில் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, சத்துக்களின் இழப்பு உண்டாகின்றன. இதற்கு பதிலாக வாழை இலையில் தினமும் உணவை கட்டி எடுத்துச் சென்று சாப்பிடுபவர்களுக்கு உணவின் சத்துகள் குறையாமல், முழுவதுமாக கிடைக்க வழிவகை செய்கிறது.

banana-leaf

சுற்றுச்சூழல் 

தற்காலங்களில் பிளாஸ்டிக் எனப்படும் நெகிழி பொருளை அதிகம் பயன்படுத்துவதால், அவை உலகெங்கிலும் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசுபாடுகள் என்ன என்பதை நாம் அனைவருமே அறிவோம். பிளாஸ்டிக் பொருட்களை உணவு தயாரிப்பு மற்றும் பரிமாறுவதிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு பதிலாக வாழை இலையில் சாப்பிட்டு அந்த இலையை எறிந்தாலும், அவை மண்ணில் விரைவாக மக்கி, நிலத்திற்கு உரமாக மாறுகிறது. எனவே சுற்றுச்சூழலுக்கு மிக நன்மை செய்யக்கூடிய ஒரு பொருளாக வாழை இலை இருக்கிறது.

கண்கள் 

நமது முகத்தில் இருக்கும் கண்கள், நாம் அனைத்தையும் பார்க்க உதவுகிறது. இந்த கண்களின் பெரும்பகுதி நீர்த் தன்மை வாய்ந்த திசுக்களால் ஆனது. கண்களில் ஈரப்பதம் குறையாமல் இருக்கும் பட்சத்தில், கண் பார்வை குறைபாடு, கண் அழுத்தம் போன்ற நோய்கள் உண்டாகாது. வாழை இலையில் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு கண்பார்வை குறைபாடுகள் ஏதும் ஏற்படாது.

நோய் எதிர்ப்பு சக்தி 

மனிதர்களின் உடலில் வாய்வு பித்தம் கபம் என்கிற முக்குணங்கள் இருக்கின்றன. இந்த முக்கோணங்களில் ஏதேனும் ஒன்றின் சமநிலைத் தன்மை மாறுபடும் பட்சத்தில் உடலில் நோய்கள் ஏற்படுகின்றன. வாழை இலையில் தினமும் உணவு சாப்பிடுபவர்களுக்கு இந்த மூன்று குணங்களின் சமநிலைத்தன்மை சீராக காக்கப்பட்டு, உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரித்து, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

banana-leaf

தீக்காயங்கள் 

தீ விபத்தில் சிக்கி மீண்டு உடல்நலம் தேறும் நோயாளிகள், தினமும் பச்சை வாழை இலையில் படுத்துறங்கி வந்தால் தீக்காயங்கள் மிக சீக்கிரத்தில் ஆறும். வாழை இலைகள் தீக்காயங்களில் இருக்கின்ற நச்சுத்தன்மையை அந்த இழுத்துக்கொள்ளும். சிறிய அளவில் தீக்காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெருபவர்கள் தீக்காயம் பட்ட பகுதியில் வாழை இலையை வைத்து, தினமும் கட்டி வந்தால் வெகு சீக்கிரத்தில் வந்து தீ காயங்கள் ஆறும்.