Advertisement

பித்தவெடிப்பு நீங்க பாட்டி வைத்தியம்

பித்தவெடிப்பு நீங்க பாட்டி வைத்தியம்

pitha-vedippu-1

பித்தவெடிப்பு என்பது பொதுவாக ஆண்,பெண் அனைவருக்குமே ஏற்படும் ஒரு உடல் சார்ந்த பிரச்சனை தான். இப்பாதிப்பு உடலின் முக்குணங்களான வாத, பித்த, கபம் ஆகியவற்றில் பித்தம் அதிகரித்து உடலின் முக்குண சமநிலை பாதிக்கப்படுவதாலும், சில நுண்ணியக் கிருமிகளாலும் ஏற்பட்டு நாம் நடக்கும் போது சில சமயம் வலியை ஏற்படுத்துகிறது. இந்த பாதிப்புகளை நீக்குவதற்கான சித்த மருத்துவம் சார்ந்த வழிமுறைகளை இங்கு காண்போம்.

padha vedippu

குறிப்பு 1:

காலையில் தூக்கத்திலிருந்து எழுந்த பின்பும், இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு அகன்ற பாத்திரத்தில் வெந்நீர் ஊற்றிச் சிறிது கல்லுப்புக் கலந்து பாதங்களை ஒரு 15 நிமிடம் வைத்திருந்து எடுக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர, பாதத்திலுள்ள வெடிப்புகளில் இருக்கும் நுண்ணியக் கிருமிகள் அழிந்து, இறந்த பாத தோல் பொறுக்குகள் உதிர்ந்து, புதிய தோல் வளர்ந்து வெடிப்புகள் மறையும்.

குறிப்பு 2:

சிறிது வேப்பிலை, சிறிது மருதாணி இலை, மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்கு மைப் போல் அரைத்து பாத வெடிப்புகளில் தடவி வர பித்தவெடிப்பு நீங்கும்.

Neem

குறிப்பு 3:

தேனையும், சுண்ணாம்பையும் சம அளவுச் சேர்த்து நன்கு கலக்கிக், குழைத்து பாதங்களில் இரவு உறங்கும் முன்பு தடவ வேண்டும்.இதை வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். இதன் மூலம் பாத வெடிப்பு குறையும்.

குறிப்பு 4:

கற்றாழையை பசைப் போல் நன்கு அரைத்துக் கொண்டு, இரவு பாத வெடிப்புகளில் தடவி சுத்தமான காலுறைகளை அணிந்து கொண்டு உறங்க வேண்டும். இதை தினமும் செய்ய சீக்கிரத்திலேயே பாத வெடிப்புகள் மறையும்.

katralai

குறிப்பு 5:

இப்பாதவெடிப்புகள் ஏற்பட ஒரு முக்கியக் காரணம் சுகாதாரமின்மையாகும். வெளியில் வெறுங் கால்களுடன் நடந்து செல்லும் போது சாலையிலும், சுற்றுப்புறங்களிலும் இருக்கும் நுண்ணியக் கிருமிகள் நம் பாதங்களில் தொற்றிக் கொண்டு பாத வெடிப்புக்களை ஏற்படுத்துகிறது. எனவே எங்கே செல்லும் போதும் கால்களில் செருப்புகள் அணிந்து செல்ல வேண்டும்.