Advertisement

உலர் அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்

உலர் அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்

அத்திப்பழத்தினை உலரவைத்து, ஒரு வட்டமான வடிவில், வைக்கோலில் கோர்க்கப்பட்டு, சில கடைகளில் விற்கப்படும். சிலருக்கு இது உலர் அத்திப்பழம் என்றும், இந்த பழத்தை சாப்பிடுவார்கள் என்பது கூட தெரியாமல் இருக்கும். ஏனென்றால் இதனுடைய சுவையும், பயனும் அறியாத காரணத்தால் தான். உலர் அத்திப்பழத்தின் பயனை தெரிந்து கொண்டால் இதை வாங்கி உண்ண வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் வந்துவிடும். இதன் விலை சற்று அதிகமாக தான் இருக்கும். பலன்களும் அதிகமாக தரும். நாட்டுமருந்து கடை அல்லது டிரைஃபுட் பொருட்கள் விற்கும் கடையில் இது கிடைக்கும். இந்த உலர் அத்திப்பழத்தின் பயனை பற்றி பார்ப்போமா.

 dryfig

அத்திப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் இ, கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளதால் இந்த பழத்தை நாம் அடிக்கடி சாப்பிடலாம். இது நம் உடலுக்கு ஆற்றலைத் தருவதோடு ஆரோக்கியத்தையும் தருகிறது. தினமும் 1 அல்லது 2 அத்திப்பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் ஏற்படும் பயன்கள்.

இதயத்திற்கு

இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் நம் இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதன் மூலம் இதயத்தின் ரத்த ஓட்டம் சீராக்கப் படுகிறது. ட்ரைகிளிசரைடுகள் அளவை குறைப்பதால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்படும். இதயம் ஆரோக்கியமாகும். இதற்கு தினமும் ஒன்று அல்லது இரண்டு அத்திப்பழத்தை சாப்பிட்டு வரலாம்.

 dryfig

புற்றுநோயை தடுக்கும்

புற்றுநோயை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் இந்த அத்திப்பழத்தில் உள்ளதால் நம் உடலானது புற்றுநோயை உண்டாக்கும் செல்லகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. நம் உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

எலும்புகள் வலுவாக

தினமும் ஒரு அத்திப்பழத்தை சாப்பிட்டு வருவதால் நம் உடலில் உள்ள எலும்புகள் பலப்படுத்துகிறது. ஒரு அத்திப்பழத்தில் 3% கால்சியம் உள்ளது.நம் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான கால்சியம் அளவை இந்த ஒரு அத்திப் பழமே கொடுத்து விடுகிறது. இதனால் எலும்பு தேய்மானம் ஏற்படாமல் மூட்டு வலி வராமல் தடுக்கலாம்.

 dryfig

எடை குறைப்பு

ஒரு உலர் அத்திப்பழத்தில் 47 கலோரிகள் உள்ளது. இதன்மூலம் 0.2 கிராம் கொழுப்பு சத்துதான் நம் உடலுக்கு போய் சேரும். இதனால் நம் உடல் எடையானது குறைக்கப்பட்டு பல பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. இந்த உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது.

செரிமானத்தை அதிகப்படுத்துகிறது

தினமும் மூன்று அத்திப்பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் 5 கிராம் அளவிலான நார் சத்து நம் உடலுக்கு கிடைக்கப்பெறுகிறது. இதனால் மலச்சிக்கலில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

 dryfig

உயர் ரத்த அழுத்தம்

பொதுவாக நம் உடலில் சோடியத்தின் அளவு அதிகமாகி, பொட்டாசியத்தின் அளவு குறைவதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். ஆனால் இந்த உலர்ந்த அத்திப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாகவும், சோடியத்தின் சத்து குறைவாகவும் இருக்கிறது. இதனை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

சர்க்கரை நோய்க்கு

இதில் அடங்கி இருக்கும் நார்ச்சத்தினால், நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதனை தாராளமாக உண்ணலாம். இதை எந்த அளவிற்கு உட்கொண்டு வரவேண்டும் என்பதை மட்டும் மருத்துவரிடம் ஆலோசனை கேட்ட பின்பு இந்த பழக்கத்தை தொடங்க வேண்டும்.

 dryfig

ரத்த சோகை வராமல் தடுக்கும்

ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 2% இரும்புச்சத்து இருக்கிறது. இது உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்தி ரத்தத்தின் உற்பத்தியையும் அதிகப்படுத்துகிறது. நமக்கு ரத்தசோகை வராமல் தடுப்பதற்கு பெரிதும் உதவியாக உள்ளது.

இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியம்

இந்த உலர் அத்திப்பழமானது பாலுணர்ச்சியை தூண்டுவதற்க்காக பயன்படுத்தப்படுவதாக கிரேக்கர்கள் கூறுகின்றனர். இந்த அத்தி பழத்தில் உள்ள ஜிங்க், மக்னீசியம் போன்ற சத்துக்கள் இனப்பெருக்க மண்டலத்தை மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துவதாக கூறப்படுகிறது.