குழந்தை இதய துடிப்பை கேட்பது எப்படி?
வயிற்றில் குழந்தையை சுமந்திருக்கும் பெண்கள் அனைவருக்குமே வருகிற ஆசை எதுவென்றால் தங்கள் கருவில் வளரும் குழந்தையின் இதயத்துடிப்பை முதன்முதலில் கேட்க வேண்டும் என்பது தான். ஆனால், குழந்தையின் இதயத்துடிப்பை சீராக்க இயற்கையிலே கர்ப்பிணிகளுக்கான பல உணவுகள் இருக்க, குழந்தையின் இதயத்துடிப்பை அடிக்கடி அறிய ஆசைப்படுவதால் ஆபத்து ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக சொல்கிறது உண்மை. அதற்கு முதலில் கருவில் இருக்கும் குழந்தையின் இதயத் துடிப்பை கண்டறிவதை பற்றி நாம் பார்க்கலாம்.
டாப்ளர் கருவி
இந்த டாப்ளர் கருவியானது கருவில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பை படம்பிடித்து காட்டக்கூடிய ஒரு சிறந்த மருத்துவ கருவி ஆகும். இந்த கருவியின் மூலம் கர்ப்பிணி பெண்கள் முதன் முதலில் தங்கள் வயிற்றில் வளரும் குழந்தையின் இதயத்துடிப்பை கேட்க முடியும். இதற்காக பிரத்யோகமான ஒலி அலைகள் டாப்ளர் கருவியில் பயன்படுத்தபடுவதால், அதன் மூலமாக பெண்கள் தங்கள் வயிற்றில் வளரும் குழந்தைகளின் இதயத்துடிப்பை தெள்ள தெளிவாக கேட்டு மகிழ முடியும்.
இந்த டாப்ளர் கருவி பயன்படுத்தும் சமயம். மருத்துவமனையில் இருக்கும் கட்டிலில் கர்ப்பிணிகள் மெதுவாக படுக்கவைக்கப்படுவார்கள். கருவி கர்ப்பிணி பெண்களின் வயிற்றின் மீது பிரயோகிக்கப்படுவதால், வயிற்று பகுதியில் இருக்கும் ஆடை சற்று விலக்கப்படும்.
பின்பு மருத்துவர் அல்லது டாப்ளர் கருவி இயக்கும் மருத்துவ பணியாளர் கர்ப்பிணி பெண்களின் வயிற்றின் மீது ஜெல்லி போன்ற ஒரு ஜெல் பசையை தடவி விடுவார்கள் விடுவார்கள். இந்த ஜெல் டாப்ளர் கருவி மூலம் வயிற்றில் இருக்கும் குழ்நதையின் இதையே துடிப்பை கேட்க உதவும், இணைப்பு முகவராக செயல்படும்.
இதனால் நடுநிலை சத்தங்கள் குறைந்து, உங்கள் குழந்தையின் இதயத்துடிப்பை தெளிவாக கேட்க தூண்டும். பிறகு அந்த ஜெல் மீது டாப்ளர் எனும் கருவி வைத்து இயக்கும் போது, கர்ப்பிணிகள் அவர்கள் வயிற்றில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பை நன்றாக கேட்க முடியும்.மருத்துவரின் மேற்பார்வையில் இந்த டாப்ளர் கருவி முறை மேற்கொள்ளப்படுவதால் நிச்சயமாக இதனால் எந்த வித ஆபத்தும் கர்ப்பிணிகளுக்கும் அவர்களின் குழந்தைக்கும் ஏற்படுவது இல்லை
குழந்தையின் இதயத்துடிப்பை முறையாக மருத்துவர் உதவியுடன் டாப்ளர் பயன்படுத்தி தெரிந்துகொள்வது நல்லது. வீட்டிலேயே சிலர் டாப்ளர் பயன்படுத்த முயல்வது நல்லதல்ல. டாப்ளர் கருவி பற்றிய தெளிவு இல்லாமலும், பதட்டத்தால் இக்கருவியின் ஒலி அளவை குறைத்து வைத்துவிட்டு கதறுவதில் எந்த பயனுமில்லை. நீங்கள் செய்யும் முறை தவறாக இருப்பின், குழந்தையின் இதயத்துடிப்பை கேட்க முடியாமல் போவதோடு தேவையற்ற பயத்தையும் உங்களுக்கும், உங்கள் கருவில் இருக்கும் குழந்தைக்கும் சேர்த்து கொடுத்து விடும்.
வீட்டிலேயே முயற்சி செய்யும்போது குழந்தையின் நிலையால் குழப்பம் வரலாம். கருவில் வளரும் குழந்தை தலைகீழாக இருக்கும் பட்சத்தில் இதயத்துடிப்பு எந்த பக்கம் இருக்குமென தெரியாமல் டாப்ளர் பயன்படுத்துவதால் ஒரு பயனும் இல்லை. கருவில் வளரும் ஒரு குழந்தையின் இதயத்துடிப்பு என்பது 5ஆவது வாரத்தின் இறுதியில் தொடங்குகிறது. அந்த இதயத்துடிப்பு என்பது குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப மாறுபடும். 9 வாரத்தில், ஒரு நிமிடத்திற்கு 175 முறை குழந்தையின் துடிக்க தொடங்குகிறது.
டாப்ளர் கருவி பயன்படுத்தி குழந்தைகளின் இதயத்துடிப்பை கேட்கும்போது எல்லாமே சரியாக இருக்கிறது என உங்கள் மனம் நினைத்தால் நல்லது. ஒருவேளை நீங்கள் ஏதேனும் எதிர்மறையாக நினைப்பீர்கள் எனில் அது மனதளவில் மிகவும் ஆபத்தை தந்துவிடும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.
டாப்ளர் என்பது குழந்தைகளின் இதய துடிப்பை நாம் உணர வைக்கும் அற்புதமான கருவி என்றாலும், அதை தவறான முறையில் கையாள்வதால் பல்வேறு விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதை புரிந்து, மருத்துவமனைக்கு சென்று முறையான வழியில் கர்ப்பிணிகள் தங்கள் குழந்தைகளின் விலைமதிப்பற்ற அழகிய துடிப்பை கேட்பதே சிறந்ததாகும்.