Advertisement

பிரஷர் குக்கரில் இருந்து, விசில் வரும் போது, குழம்பு பொங்கி மேலே வருகிறதா? இப்படி மட்டும் செஞ்சு பாருங்க! குக்கரில் இருந்து ஒரு சொட்டு குழம்பு கூட வெளியே வராது.

பிரஷர் குக்கரில் இருந்து, விசில் வரும் போது, குழம்பு பொங்கி மேலே வருகிறதா? இப்படி மட்டும் செஞ்சு பாருங்க! குக்கரில் இருந்து ஒரு சொட்டு குழம்பு கூட வெளியே வராது.

எல்லோரது வீடுகளிலும் பெண்களுக்கு குக்கரில் குழம்பு வைப்பது மிகவும் சுலபம் ஆகிவிட்டது. ஆனால், அந்த குழம்பானது விசில் வரும் போது பொங்கி, மேலே இருக்கும் எண்ணெயில், சுவையும் வெளிவரும் போது தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். உங்கள் வீட்டு குக்கரில் விசில் வரும் போது, குழம்பு வெளியே வராமல் இருக்க என்ன செய்யலாம்? என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

cooker2

நம் வீட்டில் இருக்கும் பிரஷர் குக்கரை முதலில் முறையாக பராமரிக்க வேண்டும். தினம்தோறும் குக்கர் விசிலை தனித் தனியாக கழட்டி சுத்தமாக கழுவ வேண்டும். பிரஷர் குக்கர் மூடியில், மாட்டும் ரப்பரை, குக்கர் மூடியில் இருந்து கழட்டி உள்பக்கம் சுத்தமாக கழுவ வேண்டும். சில பேர் குக்கர் மூடியில் இருந்து ரபரையும், விசிலயும், கழட்டி சுத்தம் பண்ணவே மாட்டாங்க.

குறிப்பாக பிரஷர் குக்கரின் ரப்பர், உபயோகப்படுத்தாத சமயத்தில் அதை குக்கரில் இருந்து கழட்டி, நம் வீட்டு ஃப்ரீஸரில் வைக்க வேண்டும். வீட்டில் பிரிட்ஜ் இல்லாதவர்கள் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் கேஸ்கட் என்று சொல்லப்படும் ரப்பரை போட்டு வைக்க வேண்டும். பிரஷர் குக்கரின் மூடியில் இருக்கும் துவாரங்களை சிறிய குச்சி வைத்து சுத்தமாக, தினம்தோறும் கழுவ வேண்டும். இப்படியாக குக்கரை முறையாக பராமரித்து வந்தோம் ஆனால் நல்லது.

presure-cooker-lid

இப்போது குழம்பு பொங்காமல் இருக்க என்ன செய்வது என்று பார்க்கலாம்? குக்கரில், பருப்பு வேக வைப்பதாக இருந்தாலும் சரி, குழம்பு வைப்பதாக இருந்தாலும் சரி, அது நன்றாக கொதித்த பின்பு, இரண்டு சொட்டு நல்லெண்ணையை ஊற்றி அதன் பின்பு குக்கரை மூடவும்.

நன்றாக குழம்பு கொதி வந்த பின்பு, உங்களது கேஸ் ஸ்டவ் கட்டாயம் சிம்மில் வைத்து விட்டுதான் குக்கரை மூட வேண்டும். அதாவது அடுப்பை முழுமையாக குறைத்து விட வேண்டும். இதேபோல், எக்காரணத்தைக் கொண்டும் குக்கர் முழுவதும் குழம்பு வைக்க கூடாது. உங்களது குக்கர் அளவிற்கு ஏற்ப, முக்கால்வாசி அளவு மட்டும்தான் குழம்பு இருக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக வைக்கும் பட்சத்தில் பொங்கி கீழே வழியைத்தான் செய்யும். (குக்கரை மூடி போட்டு, விசில் இருக்கும் போது, உங்களது ஸ்டவ் எப்போதும் சிம்மில் இருப்பது அவசியம். சிம்மில் இருக்கும் பட்சத்தில் கட்டாயம், குழம்பு பொங்கி வழியாது.)

visil

சில பேர் வீடுகளில் குக்கரில் சாதம் வைக்கும் பழக்கம் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் சாதத்தை வைத்து விட்டு, நன்றாக கொதி வந்த பின்பு, அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அடுப்பை சிறியதாக குறைத்துக் கொண்டு, அதன் பின் குக்கரைக்கு மூடி போடுங்கள். சாதம் நிச்சயம் பொங்கி வெளியே வராது. இப்படியாக பொறுமையோடு குக்கரை கையாளும் பட்சத்தில், ஒரு சொட்டு கூட குழம்பு வீணாகாமல், ருசி போகாமல், சமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.