Advertisement

ரேஷன் அரிசியை, ஒருமுறை இந்த முறையில் சுத்தம் செய்து, சாதம் வடித்து தான் பாருங்களேன்! கடையில் காசு கொடுத்து அரிசி வாங்கவே மாட்டிங்க!

ரேஷன் அரிசியை, ஒருமுறை இந்த முறையில் சுத்தம் செய்து, சாதம் வடித்து தான் பாருங்களேன்! கடையில் காசு கொடுத்து அரிசி வாங்கவே மாட்டிங்க!

இன்று நிறைய பேர் வீடுகளில் ரேஷன் அரிசியை வாங்கி உபயோகப்படுத்துவதே கிடையாது. நம்மில் பல பேர் வீட்டில் காசு கொடுத்துதான் அரிசி வாங்கி, சாதம் வடித்து சாப்பிடுகின்றோம். ஆனால், ரேஷன் அரிசியையும் கூட, கடையில் காசு கொடுத்து வாங்கும் அரிசியை போல, எந்த விதமான வாசனையும் இல்லாமல், நம்மால் வடிக்க முடியும். இந்த முறையில் ரேஷன் அரிசியை கழுவி, இப்படி ஒரே ஒரு நாள் சாதம் வைத்து சோதனை செய்து பாருங்கள்! ரேஷன் அரிசியை என்ன செய்தால், கடையில் வாங்கின நல்ல அரிசி போல், மாறும்! என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

rice-bugs

முதலில் ரேஷன் அரிசியை முறத்தில் போட்டு, புடைத்து, தூசுகள், பூச்சு, இல்லாமல் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். முறத்திலிருந்து ஒரு பெரிய பாத்திரத்தில், அரிசியை கொட்டி கொள்ளுங்கள். அடுத்ததாக சுடு தண்ணீரையும், கல் உப்பையும் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பெரிய பாத்திரத்தில் ரேஷன் அரிசியை கொட்டி, 2 டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு வெந்நீர் ஊற்றி ஒரு கரண்டியை வைத்து, கலக்கிய படி நன்றாக கழுவுங்கள். சுடுநீரில் கை போட முடியாது.

வெந்நீர் ஊற்றி, கல்லுப்பு போட்டு, நான்கு முறை நன்றாக அரிசியை அலசி எடுக்க வேண்டும். அதன்பின்பு சாதாரண தண்ணீர் ஊற்றி, இரண்டு முறை அலசி எடுங்கள். இப்போ சாதம் வைக்க, ரேஷன் அரிசி தயாராக உள்ளது. உங்கள் வீட்டு உலைபானை நன்றாக கொதித்ததும் ரேஷன் அரிசியை போட்டு விடுங்கள்.

rice-boiling

சாப்பாடு முக்கால் பாகம் நன்றாக வேகட்டும். அதற்குள் மற்றொரு கேஸ் ஸ்டவ்வில், மற்றொரு பக்கத்தில், மற்றொரு பாத்திரத்தில், சுடு தண்ணீரை போட்டு வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பக்கம் சாதம் முக்கால் பாகம் வெந்ததும், அரிசி வெந்து கொண்டிருக்கும் அந்த பானையிலிருந்து தண்ணீரை மட்டும் வடித்து எடுத்து விடவேண்டும். மறுபக்கம் கொதித்துக் கொண்டிருக்கும் சுடு தண்ணீரை எடுத்து இந்த உலை பானையில் ஊற்றி, மீதமுள்ள கால் பாகம் சாப்பாட்டை வேக வையுங்கள்.

(மாற்றிய தண்ணீரில் ஒருமுறை கொதி வந்ததும் அந்தத் தண்ணீரையும், வடித்துவிட்டு மறுமுறை சுடு தண்ணீர் வேண்டுமென்றாலும் ஊற்றலாம்.) இரண்டு முறை இப்படி அந்த சாதத்தில் தண்ணீரை மாற்றும்போது, அந்த அரிசியில் இருக்கும் வாடை எல்லாம் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

rice-wash-water1

இறுதியாக சாதம் வெந்த பதம் வந்தவுடன் வடித்து விடலாம். கடையில் வாங்கி வடித்த, அரிசி சாதத்தை போல வெள்ளை நிறமாக இருக்கும். ரேஷன் அரிசியை வடித்து சாப்பிடுவதற்கு இவ்வளவு சிரமப்பட வேண்டுமா? என்று சிந்திக்காதீர்கள். முடிந்தவர்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்!

சில பேர் இட்லிக்கு ரேஷன் அரிசியை போடுவார்கள். இட்லிக்கு மாவு ஆட்டும் போதும், அரிசியை இந்த முறையில், உப்பு, சுடு தண்ணீர் போட்டு, கழுவி அலசி எடுத்தால், இட்லி வெள்ளையாகவும், எந்த வாசம் இல்லாமலும் இருக்கும்.  ரேஷன் அரிசியை மட்டுமே, மூன்று வேலையும், வடித்து சாப்பிடும் மக்கள் ஏராளம். அவர்களுக்கு இந்த குறிப்பானது உதவியாக இருக்கும் என்ற நோக்கத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.