Advertisement

உங்களது முடி உதிர்வை உடனடியாக நிறுத்தி, ஊட்டச்சத்தோடு வளரச் செய்ய உங்கள் வீட்டிலேயே இருக்கும் மேஜிக் தண்ணீர்! இந்தத் தண்ணி உங்க வீட்ல இல்லன்னு சொல்லவே முடியாது.

உங்களது முடி உதிர்வை உடனடியாக நிறுத்தி, ஊட்டச்சத்தோடு வளரச் செய்ய உங்கள் வீட்டிலேயே இருக்கும் மேஜிக் தண்ணீர்! இந்தத் தண்ணி உங்க வீட்ல இல்லன்னு சொல்லவே முடியாது.

பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும், இன்றைய காலகட்டத்தில் முடி உதிரும் பிரச்சனை அதிகமாக இருக்கிறது. முடி அடர்த்தியாக பலபேருக்கு வளர்வதில்லை. இந்தப் பிரச்சனைக்கு ஒரு ரூபாய் கூட செலவில்லாமல், உங்கள் வீட்டில் இருக்கும் இந்த ஒரு தண்ணீரை பயன்படுத்தினாலே போதும். யார் வீட்டிலும் இல்லை என்று சொல்லாத அந்த தண்ணீர், எந்த தண்ணீராக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? அது என்ன தண்ணீர்? அதை பயன்படுத்தி நம்முடைய முடியை எப்படி ஊட்டச்சத்தாக மாற்றிக் கொள்ளலாம்? என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

rice-wash-water

நம்முடைய எல்லோரது வீடுகளிலும் அரிசியை கழுவும் தண்ணீர் கட்டாயம் இருக்கும். அதாவது சில பேர் அரிசி களையும் தண்ணீர் என்று சொல்லுவார்கள். அடுத்ததாக சாதத்தை வேக வைத்த பின்பு வடித்த கஞ்சிதண்ணீர். இது இரண்டுமே எல்லோர் வீட்டிலும் கட்டாயம் உண்டு. குக்கரில் சாதம் வைத்தால் என்ன பண்றதுன்னு கேட்காதீங்க! இப்படி பண்ணுனா, அரிசி பானையில், சாதம் வடித்த கஞ்சி கட்டாயம் தேவை.

உங்கள் வீட்டில் அரிசி ஊற வைத்த பின்பு, இரண்டு முறை அந்த அரிசியை கழுவி தண்ணீரை கீழே ஊற்றி விட வேண்டும். மூன்றாவது முறையாக அரிசியை கழுவும் போது, இருக்கக்கூடிய தண்ணீர் தான் நமக்கு தேவை. அடுத்ததாக சாதம் வேகவைத்து, வடித்து வைத்திருக்கும் கஞ்சியையும் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இவை இரண்டையும் சம அளவு ஒன்றாக கலந்து, ஒரு பாத்திரத்தில் மூடி போட்டு வைத்து, 12 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை புளிக்க வைக்க வேண்டும்.

rice-wash-water1

அடுத்த நாள் காலை நீங்கள் தலைக்கு குளிப்பதாக இருந்தால், இரவு நேரத்தில் வடிக்கும் கஞ்சியையும், அரிசி கழுவும்  தண்ணீரையும் எடுத்து வைத்துக்கொண்டால் சரியாக இருக்கும். இதில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்கவேண்டும். இந்த தண்ணீரானது புளித்தண்ணீர் என்பதால், குளிர்ச்சி தரக்கூடியது. முடிந்தவரை பகல் நேரத்தில் இதை முயற்சி செய்து பார்ப்பது நல்லது. மாலை நேரத்தில் தலைக்கு குளிக்கும்போது இந்த முறையை தவிர்த்துக் கொள்ளும்.

தயாராக எடுத்து வைத்திருக்கும் அந்த தண்ணீரை எப்படி முறையாக பயன்படுத்துவது என்று பார்த்துவிடலாம். எப்போதும் போல் உங்கள் தலைக்கு ஷாம்பு போட்டு குளித்தாலும் சரி. சியகாய் போட்டு குளித்தாலும் சரி. நன்றாக அழுக்கு போக குளித்து முடித்த பின்பு, இந்த புளித்த கஞ்சி தண்ணீரை எடுத்து தலையில் முடிகளின் வேர் மீது நன்றாக படும்படி, மண்டையோடுகள் நன்றாக படும்படி ஊற்றி, ஒரு ஐந்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின்பு இந்த கஞ்சி தண்ணீரானது உங்களது முடியின் வேர்களில் ஒரு ஐந்து நிமிடம் மட்டுமே ஊறினால் போதும். இறுதியாக நல்ல தண்ணீரை ஊற்றி நன்றாக தலைமுடியை அலசி விடுங்கள். இல்லை என்றால், புளித்த வாடை தலையின் முடிவிலேயே தங்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Hair

வாரத்திற்கு 2 முறை இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள் உங்கள் முடி உதிராமல் அடர்த்தியாக வளரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. தொடர்ந்து பயன்படுத்தி வர வேண்டும். புளித்த தண்ணீரில் இருக்கும் விட்டமின் சத்து, மினரல் சத்து, அண்டிஆக்சிடன்ட்ஸ் வேரில் ஊடுருவி நமது மூடியை அடர்த்தியாகவும் அழகாகவும் வளரச்செய்யும்.