Advertisement

உங்கள் கழுத்தில் இருக்கும் கருப்பு நிறத்தை, ஒரு துண்டு வைத்து துடைத்து எடுத்தாலே போய்விடும். இப்படி செஞ்சி பாருங்க!

உங்கள் கழுத்தில் இருக்கும் கருப்பு  நிறத்தை, ஒரு துண்டு வைத்து துடைத்து எடுத்தாலே போய்விடும். இப்படி செஞ்சி பாருங்க!

பெரும்பாலானவர்களுக்கு முகம் வெள்ளை நிறமாக இருந்தாலும், கழுத்து மாநிறமாக இருக்கும். பல பேருக்கு கருப்பு நிறமாகவே இருக்கும். அதை சுலபமான முறையில் வீட்டில் இருந்தபடியே எப்படி போக்குவது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

dark-neck

முதலில், சுடு தண்ணீரில் ஒரு காட்டன் துண்டை நனைத்து, பிழிந்து உங்களுடைய கழுத்துப் பகுதியில் போட்டுக்கொள்ளுங்கள். கொதிக்கக் கொதிக்கப் போட்டுக் கொள்ளாதீர்கள். வெதுவெதுப்பான நிலையில், சூடு தாங்கும் அளவிற்கு துண்டு இருந்தால் போதுமானது. ஒரு ஐந்து நிமிடம் கழித்து அந்தத் துண்டை எடுத்து விடுங்கள்.

அதன்பின்பு, ஒரு சிறிய பவுலில் சர்க்கரை ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு ஊற்றவேண்டும். 1/2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து விட்டு, நீங்கள் பிழிந்த எலுமிச்சை பழத் தோலால் இந்த கலவையை தொட்டு, கழுத்தை நன்றாக ஸ்கிரப் செய்ய வேண்டும். ஐந்து நிமிடங்கள் வரை செய்தால் போதுமானது. அதன் பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் நனைக்கப்பட்ட துண்டில் இந்த கலவையை கழுத்தில் இருந்து துடைத்து எடுத்துவிடுங்கள்.

elumichai lemon

அடுத்ததாக, கழுத்திற்கு ஒரு பேக் போட வேண்டும். இதற்கு தேவையான பொருட்கள். உருளைக்கிழங்கை நன்றாக துருவி எடுத்து, அரைத்து, ஜூஸ் எடுத்துக் கொள்ளவேண்டும். அரிசி மாவு 2 ஸ்பூன், தேன் ஒரு ஸ்பூன், தண்ணீர் ஊற்றி கலக்கக்கூடாது. உருளைக்கிழங்கு ஜூஸில் தான் கலக்க வேண்டும். இதை கழுத்தின் கீழ்ப் பக்கத்தில் இருந்து மேல் பக்கம் வரை, நன்றாக தடவி 20 நிமிடங்கள் காய விட்டு விடுங்கள். அதன் பின்பு உங்களது கையில் சிறிதளவு தண்ணீரை தொட்டு, கழுத்து பாகத்தை வட்ட வடிவில் 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.

அதன் பின்பு தண்ணீர் ஊற்றி கழுவி விடுங்கள். இப்போது ஒரு வெள்ளை நிறத் துண்டு எடுத்து உங்களது கழுத்தை லேசாக அழுத்தம் கொடுத்து துடைத்தால் போதும். கருவண்ணம் உங்கள் துண்டில் ஒட்டிக் கொண்டு வருவதை கண்கூடாக காணலாம். லேசாக கருப்பு வண்ணம் உள்ளவர்களுக்கு இதை முதல் முறை செய்யும் போதே, பாதி குறைந்து இருக்கும். அதிகப்படியான கருப்பு வண்ணம் கழுத்தில் உள்ளவர்கள், தொடர்ந்து செய்து வர கூடிய விரைவில் மறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

potato-urulai

இதோடு மட்டும் விட்டுவிடாமல் தினந்தோறும் குளிக்கும் சமயத்தில், உடம்பை தேய்த்து குளிக்கும் நாரை பயன்படுத்தி(body scrubber), கழுத்தை ஸ்கரப் செய்து குளிப்பது மிகவும் நல்லது. மீண்டும் மீண்டும் கரு வண்ணம் வராமல் தடுக்க இந்த முறையானது மிகவும் உபயோகமானதாக இருக்கும்.