தர்பூசணி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?
தை பிறந்த உடன் சிறிது சிறிதாக குளிர் காலம் நீங்கி கோடை காலம் நோக்கி செல்லும் சூழல் ஏற்படுகிறது. கோடைகாலங்களில் எப்போதும் உடலில் நீர்சத்து இருப்பதும், உடல் குளிர்ந்த நிலையில் இருப்பதும் அவசியம். இவற்றை பெற நமக்கு பல இயற்கை உணவுகள் உதவுகின்றன. அதில் ஒன்று தான் “தர்பூசணி” பழம். இந்த தர்பூசணி பழம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தர்பூசணி நன்மைகள்
சிறுநீரகம்
கோடைகாலங்களில் மற்ற காலங்களை விட தாகம் அதிகம் ஏற்படும். இக்காலங்களில் நீர்சத்து நிறைந்துள்ள தர்பூசணி பழங்களை அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுவதோடு, சிறுநீர் பைகளில் மூத்திர அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும். சிறுநீரில் உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும்.
ரத்த ஓட்டம்
உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியம். கோடைகாலங்களில் உடலின் நீர் வியர்வையாக வெளியேறிவிடுவதால் ரத்தத்தில் நீர்சத்து குறைந்து ரத்த ஓட்டம் வேகம் குறைகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் ரத்தத்தில் நீர் சத்து சேர்ந்து, ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
உடல் குளிர்ச்சி
கோடைகாலங்களில் வெப்பம் அதிகரிப்பது, அனல் கற்று வீசுவதால் உடலில் இருகின்ற நீர் சத்துகள் வெளியேறி, உடல் சுலபத்தில் வெப்பமடைகிறது. இதனால் நமக்கு சீக்கிரத்தில் சோர்வு உண்டாகிறது. கோடைகாலங்களில் கிடைக்கின்ற சமயங்களில் தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடைந்து, உடற்சோர்வை நீக்குகிறது.
மலச்சிக்கல்
நார்ச்சத்து குறைந்த உணவுகளையும், மாவுச்சத்து மிகுந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிடுவதால் பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகிறது. வயிற்றில் நீர்சத்து குறைவதாலும் மலச்சிக்கல் ஏற்பட காரணமாக இருக்கிறது. தர்பூசணி பழங்களில் நார்ச்சத்து மற்றும் நீர் சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனை தீருகிறது.
ஊட்டச்சத்து
நமது உடல்நிலை சிறப்பாக இருக்கவும், அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் உடலுக்கு தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை அத்தியாவசிய தேவையாகும் இவை அனைத்தும் அவ்வப்போது நாம் தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கின்றன.
ஆண்மை குறைபாடுகள்
நரம்புகள் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதில் சில இளம் மற்றும் நடுத்தர வயது ஆண்கள் சிலருக்கு ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது. தர்பூசணி பழத்தில் சிட்ருலின் சத்து அதிகம் உள்ளது. இது தர்பூசணி பழத்தில் வெள்ளையாக இருக்கும் பகுதியில் அதிகம் உள்ளது. எனவே பழத்தை சாப்பிடுவதோடு இந்த வெள்ளை பகுதியை சாப்பிடுவதால் ஆண்மை குறைபாடுகளை போக்க முடியும்.
இளமை தோற்றம்
வயது முதிர்ச்சி அடையும் போது ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் தோல் கடின தன்மை பெறுவதோடு, தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது, ஈரப்பதம் குறைவது போன்றவை ஏற்பட்டு முதுமையான தோற்றம் பெற செய்கிறது. இவர்கள் தர்பூசணி பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் உங்களின் தோலின் செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி பளபளப்பை அதிகரித்து, சுருக்கங்களை போக்கி, இளமை தோற்றத்தை நீடிக்க செய்கிறது.
இதயம்
நமது உடலின் முக்கிய உறுப்பான இதயத்தை ஆரோக்கியமாக இருப்பது அவசியம். இதற்கு நமது உணவில் கொழுப்பு சத்துகள் குறைந்த, நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை அதிகரித்து கொள்ள வேண்டும். தர்பூசணி பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.
உடல் எடை குறைப்பு
உடல் எடை குறைய தர்பூசணி பழம் உதவுகிறது. ஸ்ட்ராபெரி பழத்தில் நார்ச்சத்து மற்றும் கொழுப்பை கரைக்கக்கூடிய வேதிப்பொருட்கள் அதிகம் நிறைந்துள்ளன. தினந்தோறும் காலையில் தர்பூசணி பழங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் சீக்கிரத்தில் எடை குறையும். நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் கொழுப்பு உடலில் சேராமலும் தடுக்கும்.
புற்று நோய் தடுப்பு
நமது உடலில் இருக்கும் செல்களில் ஏற்படும் பல மாற்றங்களாலும், உடலில் சேரும் பல வகையான நச்சுக்களின் சேர்மானத்தினாலும் புற்று நோய் ஏற்படுவது அதிகரிக்கிறது. தர்பூசணி பழங்கள் அதிகம் சாப்பிடுவதால் புற்று நோய் எதிர்ப்பாற்றல் வளருகிறது என மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கண்பார்வை
தர்பூசணி பழத்தில் வைட்டமின் சத்துகள் நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். கண்ணில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை தர்பூசணி பழத்தில் இருக்கும் சத்துகள் ஊக்கப்படுத்தி, வயதாவதால் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது.