வயிற்றில் குழந்தை அசைவு குறைவு ஏற்பட காரணங்கள் இதோ
மனித இனமும் விலங்கினங்களை போன்ற பாலூட்டி இனம் தான். இந்த மனித இனத்தில் பெண்ணினம் கருவில் குழந்தையை சுமந்து 10 மாதங்களுக்கு பிறகு ஒரு முழுமையான குழந்தையை பெற்றெடுக்கிறது. பெண்கள் கருவில் குழந்தை வளரும் காலத்தில், கருப்பையில் அக்குழந்தையின் அசைவு ஏற்படுவது ஒரு ஆரோக்கியமான அறிகுறியாகும். வயிற்றில் குழந்தையின் அசைவு பற்றிய மேலும் பல தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
முதன் முறையாக கருத்தரிக்கும் பெண்களுக்கு குழந்தையின் அசைவு, கால் உதைக்கும் செயல் போன்றவற்றை 18 வாரங்களில் தொடங்கி 24 ஆவது வாரத்திற்குள் உணர முடியும். இரண்டாவது முறையாக கருத்தரிக்கும் பெண்களுக்கு கருத்தரித்த 13 ஆவது வாரத்திலேயே தங்களின் கருப்பையில் குழந்தையின் அசைவுகளை உணர முடியும்.
கர்ப்பிணி பெண்கள் ஏதேனும் சாப்பிட்டு முடித்ததும் வயிற்றில் வளரும் குழந்தை அசைவதை உணர முடியும். ஏதேனும் பானம் அருந்திய பிறகும் குழந்தையின் அசைவை நன்கு உணர முடியும். ஏதாவது உடல் அசையும் வகையில் பணிகளை செய்யும் போதும் வயிற்றில் குழந்தை அசைவதை உணரலாம்.
மனிதர்களின் கர்ப்ப காலமான 38 வார காலத்தில் 36 வது வாரத்தில் இருந்து வயிற்றில் குழந்தை நன்கு வளர்ந்து விடுவதால் ஓரளவிற்கு அக்குழந்தை தாயின் கருவில் அசைவதும், கால்களால் உதைக்கும் நிகழ்வுகள் சற்று குறைந்து விடும். கருவில் வளரும் குழந்தையின் அசைவு குழந்தையின் ஆரோக்கியத்தை கூறும் ஒரு அறிகுறியாகும் எனவே பேறு காலத்தில் வழக்கமான மருத்துவரிடம் முறையான காலகட்டத்தில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
கருவில் வளரும் குழந்தையின் அசைவு அக்குழந்தையை வயிற்றல் சுமக்கும் பெண் சாப்பிடும் உணவை பொறுத்தும் அமைகிறது. உடலுக்கு போஷாக்கு தரும், ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடும் கர்ப்பிணி பெண்கள் விரைவிலேயே வயிற்றில் குழந்தையின் அசைவை உணர்வார்கள். சத்து இல்லாத சாதாரண உணவை சாப்பிடும் கர்ப்பிணி பெண்கள் தாமதமாகவே குழந்தையின் அசைவை தாமதமாகவே உணர முடியும்.