Advertisement

சொன்னா நம்ப மாட்டீங்க! இதை ஒருமுறை உங்க முகத்துல போட்டு பாருங்க. இதை போட்ட, பத்தாவது நிமிஷம் உங்களுடைய முகம் கண்ணாடி போல மாறும்.

சொன்னா நம்ப மாட்டீங்க! இதை ஒருமுறை உங்க முகத்துல போட்டு பாருங்க. இதை போட்ட, பத்தாவது நிமிஷம் உங்களுடைய முகம் கண்ணாடி போல மாறும்.

நம்முடைய முக அழகிற்காக பின்பற்றும் சில குறிப்புகள் உடனடியாக பலனைத்தருமா? என்றால், அது சற்று சந்தேகம் தான். சில குறிப்புகள் மூலம் நாளடைவில் நல்ல பலனை பெற முடியும். ஆனால், இந்த குறிப்பை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம், இதை உங்கள் முகத்தில் போட்ட பத்தாவது நிமிடத்திலேயே, நல்ல வித்தியாசத்தை உணர முடியும். உங்களுடைய முகத்தை கண்ணாடி போல், மாற்றுவதற்கு என்ன செய்யலாம், என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

face

எங்கேயாவது வெளியில் விசேஷங்களுக்கு செல்ல வேண்டும் என்றால், டக்குனு இதை யூஸ் பண்ணிக்கலாம். எல்லாமே நம்ம வீட்ல இருக்குற பொருள்தான். இன்ஸ்டன்ட் காபி தூள் 1/2 ஸ்பூன், கடலை மாவு ஒரு டேபிள்ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் ஸ்பூன், புளிக்காத கெட்டி தயிர், பேஸ்டாக கலக்க தேவையான அளவு.

நம்முடைய முகத்தில் எந்த ஒரு பேஸ்புக்கை அப்ளே செய்வதாக இருந்தாலும், முதலில் முகத்தில் இருக்கும் மேக்கப்பை முழுமையாக துடைத்து எடுத்து விட வேண்டும். பச்சை பால் அல்லது தேங்காய் எண்ணெய் இவை இரண்டையும் பயன்படுத்தலாம். ஒரு காட்டன் துணியில் பச்சை பாலைத் தொட்டு நன்றாக முகத்தை துடைத்து எடுத்தால் முகத்தில் இருக்கும் அழுக்கும், கிரீமும் சுத்தமாக வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

scrubbing-face

அடுத்தபடியாக நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் கடலை மாவு, காபி தூள், மஞ்சள் தூள், தயிர் கலந்த பேஸ்டை, கொஞ்சமாக கையில் எடுத்து முகம் முழுவதிலும், தடவி பத்து நிமிடங்கள் வட்ட வடிவில் நன்றாக மசாஜ் செய்து விடுங்கள். அதன் பின்பு ஒரு 10 நிமிடம் அப்படியே முகத்தில் அந்த பேஸ்ட் இருக்கட்டும். 10 நிமிடங்கள் கழித்து, மீண்டும் ஐந்து நிமிடங்கள் உங்கள் கையில் சிறிதளவு தண்ணீரை தொட்டு முகத்தில் வட்ட வடிவில் மசாஜ் செய்து, குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவி விட்டாலே போதும்.


உங்கள் முகம் இந்த ஃபேஸ் பேக்கை போடுவதற்கு முன்பாக இருந்த நிறத்திற்கும், ஃபேஸ் பேக்கை போட்ட பிறகு, இப்போது இருக்கும் நிறத்திருக்கும், நல்ல வித்தியாசத்தை ஒருமுறையிலேயே உணரலாம். ஒரே ஒரு முறை முயற்சி செய்து தான் பாருங்களேன்! இந்த முறையானது உங்களுடைய முகத்திற்கு பளிச்சென்ற அழகை உடனே கொடுக்கும். நீங்கள் அடுத்த நாள் எங்கேயாவது வெளியே போக வேண்டுமென்றால், முந்தைய நாள் இரவு இப்படி செய்துகொள்ளுங்கள். மறுநாள் காலை உங்களது முகம் அவ்வளவு அழகாக, வெள்ளையாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை.