Advertisement

மூன்று நாட்களில் ஜவான் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

Jawan Box Office Collection

ஜவான் 


அட்லீ மிகப்பெரிய ஜாக்பாட் என்றால் அது ஜவான் படம் தான். தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனர் என முத்திரை பதித்த அட்லீ, திடீரென பாலிவுட் பக்கம் சென்றார்.


மூன்று நாட்களில் ஜவான் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Jawan Three Days Box Office


தன்னுடைய முதல் படத்திலேயே ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பையும் பெற்றார். இதனால் ஜவான் படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை இந்திய முழுக்க உள்ள ரசிகர்கள் வைத்திருந்தனர்.


ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத், ப்ரியாமணி என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

மூன்று நாள் வசூல் 


கலவையான விமர்சனங்களை பெற்ற ஜவான், வசூலில் முதல் நாளில் இருந்து பட்டையை கிளப்பி வருகிறது.


மூன்று நாட்களில் ஜவான் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Jawan Three Days Box Office


இந்நிலையில் வெளிவந்து மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 375 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.