OMTEX AD 2

பிக் பாஸுக்காக முக்கிய ஷோவை திடீரென முடிக்கும் விஜய் டிவி! ரசிகர்கள் ஷாக் | Vijay Tv Ending This Show For Bigg Boss 7 Tamil

பிக் பாஸ்


விஜய் டிவியில் பிக் பாஸ் 7ம் சீசன் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. அக்டோபர் 1ம் தேதி தொடக்க விழா நடக்க இருப்பதாக தகவல் பரவிய வருகிறது. ஆனால் அதை விஜய் டிவி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.


இந்த முறை மொத்தம் இரண்டு வீடுகள் இருக்கும் என கமலஹாசன் ப்ரோமோவில் அறிவித்து இருப்பதால் பிக் பாஸ் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.


முடியும் ஷோ


பிக் பாஸ் தொடங்கும் முன்பு ஒரு முக்கிய ஷோவை விஜய் டிவி முடிவுக்கு கொண்டு வர இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய கதாநாயகி ஷோ தான் முடியபோகிறது.


ராதிகா, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் இந்த ஷோவில் ஜட்ஜாக இருந்து வருகின்றனர். விரைவில் இதன் கிளைமாக்ஸ் வர இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.