10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்
பிரிவு - 2
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க. (வினா எண் 34க்குக் கட்டாயமாக விடையளிக்கவும்) (2 x 3 = 6)
32. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
- அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!
- பழமைக்கும் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே!
- பாண்டிய மன்னனின் மகளே! திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளே!
- பத்துப்பாட்டே! எட்டுத்தொகையே! பதினெண்கீழ்க்கணக்கே! நிலைத்த சிலப்பதிகாரமே! அழகான மணிமேகலையே!
- எம் உயிரும் நீ, எம் உணர்வும் நீ. உன்னை எம் முடிதாழ்த்தி வாழ்த்துகிறோம்.