10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்
31. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு. தலை வாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது நம் மரபாகக் கருதப்படுகிறது. நம் மக்கள் வாழை இலையின் மருத்துவப் பயன்களை அன்றே அறிந்திருந்தனர். உண்பவரின் மனமறிந்து, உணவு வகைகளைப் பரிமாறுவர்.
அ) தமிழர் பண்பாட்டில் எதற்கு தனித்த இடமுண்டு?
ஆ) யாருக்கு உணவளிப்பது நம் மரபாகக் கருதப்படுகிறது?
இ) இவ்வுரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.
அ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.
ஆ) தலை வாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது நம் மரபாகக் கருதப்படுகிறது.
இ) தலைப்பு: தமிழர் பண்பாடும் வாழை இலையும்.