OMTEX AD 2

Pudhiya Puyal: Chennai & Nellore Idaiye Karaiyai Kadakkum! Ungal Paathukappu Munnerpadugal Enna?

10th Standard Tamil Quarterly Exam Original Question Paper 2025 with Full Solutions

10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்

10th Tamil Quarterly Exam Question Paper

42. அ) புதிய புயல் சென்னைக்குத் தென் கிழக்கே 150 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது இன்று இரவு சென்னைக்கும் நெல்லூருக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீங்கள் செய்யும் பாதுகாப்பு முன் ஏற்பாடுகளைப் பட்டியலிடுக. (அல்லது) ஆ) மொழி பெயர்க்க.

The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. The milky clouds start their wandering. The colourful birds start twitting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows every where and makes everything pleasant.

அ) புயல்கால பாதுகாப்பு முன் ஏற்பாடுகள்:

  1. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிப்பேன்.
  2. அத்தியாவசியப் பொருட்களான உணவு, குடிநீர், மருந்து, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி போன்றவற்றைத் தயாராக வைத்திருப்பேன்.
  3. கைப்பேசி, மின்கல விளக்கு (torch light) போன்றவற்றை முழுமையாக சார்ஜ் செய்து வைப்பேன்.
  4. கதவுகளையும் ஜன்னல்களையும் இறுக்கமாக மூடி வைப்பேன்.
  5. முக்கியமான ஆவணங்களைப் பாதுகாப்பான இடத்தில் வைப்பேன்.
  6. கால்நடைகள் இருந்தால், அவற்றைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்வேன்.
  7. அதிகாரிகளின் அறிவுறுத்தலின்றி வீட்டை விட்டு வெளியேற மாட்டேன்.
  8. மின் இணைப்பையும், எரிவாயு இணைப்பையும் துண்டித்து விடுவேன்.

ஆ) மொழிபெயர்ப்பு:

தங்கக் கதிரவன் காலையில் விழித்தெழுந்து, தன் ஒளிக்கதிர்களால் இருளை அகற்றத் தொடங்குகிறான். வெண்ணிற மேகங்கள் தங்கள் பயணத்தைத் தொடங்குகின்றன. வண்ணப் பறவைகள் தங்கள் காலைப் பண்ணை இசையாய் மீட்டுகின்றன. அழகிய வண்ணத்துப்பூச்சிகள் மலர்களைச் சுற்றி நடனமாடுகின்றன. மலர்களின் நறுமணம் காற்றில் நிறைகிறது. தென்றல் மெதுவாக எங்கும் வீசி, அனைத்தையும் இனிமையாக்குகிறது.