10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்
41. மகிழ்வேந்தன் தன் தந்தை மகேந்திரனிடம் நூலகத்தில் உறுப்பினராக வேண்டினான். அவரும் மகிழ்வேந்தனிடம் 500 ரூபாயும், 23 முத்தமிழ் நகர், பாவாணர் தெரு, தாராபுரம் வட்டம், திருப்பூர் மாவட்டம் என்ற முகவரியிட்ட அடையாளச் சான்றையும் கொடுத்தார். கிளை நூலகத்திற்குச் சென்ற மகிழ்வேந்தனாக தேர்வர் தன்னைக் கருதி கொடுக்கப்பட்ட நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.
மாவட்ட மைய நூலகம், திருப்பூர்
உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பப் படிவம்
| 1. முழுப்பெயர் | : க. மகிழ்வேந்தன் |
| 2. தந்தைப் பெயர் | : பெ. மகேந்திரன் |
| 3. பிறந்த தேதி | : 15/05/2009 |
| 4. வயது | : 15 |
| 5. வீட்டு முகவரி | : 23, முத்தமிழ் நகர், பாவாணர் தெரு, தாராபுரம் வட்டம், திருப்பூர் மாவட்டம். |
| 6. கல்வித்தகுதி | : பத்தாம் வகுப்பு |
| 7. தொலைபேசி எண் | : 9876543210 |
| 8. உறுப்பினர் கட்டணம் | : ரூ. 500/- |
நான் நூலகத்தின் அனைத்து விதிகளுக்கும் கட்டுப்படுவேன் என்று உறுதியளிக்கிறேன்.
இடம்: திருப்பூர்
நாள்: 15.09.2024
தங்கள் உண்மையுள்ள,
(க. மகிழ்வேந்தன்)