10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்
37. வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு - இக்குறட்பாவில் அமைந்துள்ள அணியைச் சுட்டி விளக்குக.
அணி: உவமையணி.
விளக்கம்: ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களிடம் வரி வசூலிப்பது, வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதற்கு ஒப்பானது என்று வள்ளுவர் கூறுகிறார்.
- உவமேயம்: அரசன் கோலுடன் நின்று வரி கேட்பது.
- உவமானம்: கள்வன் வேலோடு நின்று பொருள் கேட்பது.
- உவம உருபு: 'அதுபோலும்' என்பது வெளிப்படையாக வந்துள்ளது.
எனவே, இக்குறட்பாவில் உவமையணி அமைந்துள்ளது.