OMTEX AD 2

Eduthukattu Uvamai Ani - Elithaana Vilakkam matrum Example

10th Standard Tamil Quarterly Exam Original Question Paper 2025 with Full Solutions

10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்

10th Tamil Quarterly Exam Question Paper

36. எடுத்துக்காட்டு உவமையணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

அணி விளக்கம்: உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து, உவம உருபு (போல, போன்ற) மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமையணி எனப்படும்.

எடுத்துக்காட்டு:
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

பொருத்தம்:
இக்குறளில், 'தொட்டனைத் தூறும் மணற்கேணி' என்பது உவமை. 'மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு' என்பது உவமேயம். இடையில் 'அதுபோல' என்ற உவம உருபு மறைந்து வந்துள்ளது. மணற்கேணியில் தோண்டும் அளவிற்கு நீர் ஊறும். அதுபோல, மனிதர்கள் கற்கும் அளவிற்கு அறிவு பெருகும். எனவே, இது எடுத்துக்காட்டு உவமையணி ஆகும்.