OMTEX AD 2

Showing posts with label Study Material. Show all posts
Showing posts with label Study Material. Show all posts

Penninai Paagam Konda Paadal Vina Vidai Vilakkam

10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்

பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.

பெண்ணினைப் பாகம் கொண்ட பெருந்தகைப் பரமயோகி
விண்ணிடை மொழிந்த மாற்றம் மீனவன் கேட்டு வானோர்
புண்ணிய சிறியோர் குற்றம் பொறுப்பது பெருமை அன்றோ
எண்ணிய பெரியோர்க்கு என்னா ஏத்தினான் இறைஞ்சி னானே!

12. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்

  • அ) கம்பராமாயணம்
  • ஆ) திருவிளையாடற்புராணம்
  • இ) கனிச்சாறு
  • ஈ) காசிக்காண்டம்
விடை: ஆ) திருவிளையாடற்புராணம்

13. மீனவன் - பொருள் எழுதுக.

  • அ) மீன் எடுப்பவன்
  • ஆ) பாண்டிய மன்னன்
  • இ) கடலுக்குச் செல்பவர்
  • ஈ) பொருள் தேடுபவர்
விடை: ஆ) பாண்டிய மன்னன்

14. இப்பாடலில் வரும் அடி எதுகைச் சொற்களை எழுதுக.

  • அ) புண்ணிய, எண்ணிய
  • ஆ) எண்ணிய, மொழிந்த
  • இ) பெண்ணினைப், பாகம்
  • ஈ) விண்ணிடை, மாற்றம்
விடை: அ) புண்ணிய, எண்ணிய

15. இப்பாடலினை இயற்றிய ஆசிரியர் ........

  • அ) கம்பர்
  • ஆ) பரஞ்சோதி முனிவர்
  • இ) பெருஞ்சித்திரனார்
  • ஈ) அதிவீரராமபாண்டியன்
விடை: ஆ) பரஞ்சோதி முனிவர்