ஏறுமுகத்தில் சிங்கப் பாதையில் ரிலையன்ஸ் ஜியோ.. 2வது காலாண்டில் லாபம் 185% அதிகரிப்பு..!

ஏறுமுகத்தில் சிங்கப் பாதையில்  ரிலையன்ஸ் ஜியோ.. 2வது காலாண்டில் லாபம் 185% அதிகரிப்பு..!கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் கடந்த ஆண்டை விட 185% நிகரலாபம் அதிகரித்து 2,844 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஜூன் காலாண்டில் அதன் நிகரலாபம் 2,520 கோடி ரூபாயாகும். ஆக இது செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது கிட்டதட்ட 13% சரிவாகும்.


சர்வதேச நிறுவனங்கள் முதலீடு இந்த நிலையில் ஜியோ நிறுவனத்தில் 13 சர்வதேச நிறுவனங்கள் 1,52,056 கோடி ரூபாயாக முதலீட்டினை சேர்த்துள்ளது. இந்த நிறுவனத்தில் பேஸ்புக், கூகுள், சில்வர் லேக், விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ், கேகேஆர் நிறுவனம், அபுதாபியின் முபாதலா நிறுவனம், மற்றொரு அபுதாபி நிறுவனமான ஏடிஐஏ , டிபிஜி நிறுவனம் L catterton நிறுவனமும். பிஐஎஃப் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.