Advertisement

1 கப் அரிசி இருந்தால் போதும். வித்தியாசமான இந்த ஊத்தப்பம் 15 நிமிடத்தில் செய்துவிடலாம்! இந்த குட்டி ஊத்தத்திற்கு தோசை மாவு கூட தேவையில்லை.

1 கப் அரிசி இருந்தால் போதும். வித்தியாசமான இந்த ஊத்தப்பம் 15 நிமிடத்தில் செய்துவிடலாம்! இந்த குட்டி ஊத்தத்திற்கு தோசை மாவு கூட தேவையில்லை.

ஒரு கப் அரிசியை வைத்து, சத்தான காய்கறி சேர்த்த சுவையான குட்டி ஊத்தப்ப தோசையை தான் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தோசை என்றவுடன் கிரைண்டரில் போட்டு மாவு ஆட்ட வேண்டுமா? என்று பயந்து விட வேண்டாம். மிக்ஸியில் போட்டு சுலபமாக 15 நிமிடத்தில் தயார் பண்ணி விடலாம் அரிசு ஊறுவதற்கு மட்டும் கொஞ்சம் நேரம் எடுக்கும். எப்படி என்பதை பார்த்து விடலாமா?

uthappam

குட்டி தோசை செய்ய தேவையான பொருட்கள்:

1) இட்லி அரிசி – 1 ஆழாக்கு, 2) புளித்த தயிர் – 1/4 கப் 3) உருளைக்கிழங்கு – 1 வேக வைத்தது தோல் உரித்தது, 4) கேரட் – 1 துருவியது

5) வெங்காயம் – பொடியாக வெட்டிக் கொள்ள வேண்டும் 6) இஞ்சி – சிறிதளவு பொடியாக நறுக்கி கொள்ளலாம் அல்லது துருவிக் கொள்ளலாம்.

7) பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது 8) குடை மிளகாய்-பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் 9) ஆப்பசோடா – இரண்டு சிட்டிகை

10) சீரகம்-1/4 ஸ்பூன் 11) மிளகாய் தூள்-1/4 ஸ்பூன் 12) உப்பு – தேவையான அளவு 13) மல்லித்தழை-பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்

முதலில் அரிசியை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதை பச்சரிசியிலும் செய்யலாம். ஊறவைத்த அரிசியை மிக்ஸியில் போட்டுக் கொள்ள வேண்டும். அதில் 1/4 கப் அளவு தயிர் சேர்த்து, நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு அகலமான பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கை போட்டு, கைகளாலோ, கரண்டியாலோ நன்றாக மசித்து விடுங்கள். அதன் பின்பாக துருவிய கேரட், பொடியாக வெட்டிய வெங்காயம், இஞ்சி துருவல், பச்சை மிளகாய், குடைமிளகாய், சீரகம், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு மல்லித்தழை இவைகளை சேர்த்து(தேவைப்பட்டால் துருவிய பன்னீர், பொடிதாக நறுக்கிய காளான் இவைகளையும் சேர்த்து கொள்ளலாம்) விட்டு, இறுதியாக அரைத்து வைத்திருக்கும் மாவையும் சேர்த்து, நன்றாக கலக்கிக் கொள்ளவேண்டும்.

uthappam1

மேற்குறிப்பிட்ட இருக்கும் காய்கறிகள் எல்லாம் உங்களுடைய இஷ்டம் தான். உங்கள் மாவிற்கு தேவையான அளவில் சேர்த்துக்கொள்ளலாம். இறுதியாக கொஞ்சம் தண்ணீரில், ஆப்ப சோடாவை கலந்து மாவில் சேர்த்து விடுங்கள். எல்லாவற்றையும் கலந்து ஒரு 15 நிமிடம் வரை அப்படியே வைத்து விடுங்கள். ஊறட்டும்.


நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த மாவு, கொஞ்சம் கெட்டியாக பதத்தில் இருக்க வேண்டும். தோசை மாவு பதத்திற்கு தண்ணீர் ஆகிவிடக்கூடாது. இந்த மாவை தோசைக்கல்லில் ஊற்றி எல்லாம் தேக்க முடியாது. காய்கறிகள் சேர்க்கப்பட்ட மாவு என்பதால், குட்டியாக ஊத்தப்பம் போல் தோசைக்கல்லில் ஊற்ற வேண்டும். அவ்வளவு தான்.

uthappam2

தோசைக்கல்லில் ஊற்றுவதற்கு முன் 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெயை, தோசை கல்லில் ஊற்றி தடவி விட்டி, அதன் பின்பு இந்த மாவை ஊற்றி, மிதமான தீயில் சுட்டு எடுக்க வேண்டியதுதான். சுவையான தோசை, ஆரோக்கியமான தோசை தயார். இதனுடன் தேங்காய் சட்னியோடு பரிமாறிக் கொள்ளலாம். காலையில் எந்திரிக்க உடன் அரிசியை ஊற வைத்து விட்டால், மற்ற வேலைகள் முடிவதற்குள் அரிசி ஊறிவிடும். அதன்பின்பு 15 நிமிடத்தில் புதுவிதமான டிஃபன் தயார்.