Advertisement

சாலையோரங்களில் வளரும் இந்த செடிக்கு இத்தனை பெரிய மகத்துவமா? இதோட விலையைக் கேட்டா, எங்கே பார்த்தாலும் இத பரிச்சிட்டு வந்து வித்திருவீங்க!

சாலையோரங்களில் வளரும் இந்த செடிக்கு இத்தனை பெரிய மகத்துவமா? இதோட விலையைக் கேட்டா, எங்கே பார்த்தாலும் இத பரிச்சிட்டு வந்து வித்திருவீங்க!

நமக்கு அருகில் இருக்கும் எந்த ஒரு பொருளாக இருந்தாலும், அதனுடைய அருமை பெருமைகள் நமக்கு கட்டாயம் தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில் கிராமப்புறங்களில் சாலையோரங்களிலோ அல்லது வீடுகளில் அருகாமையிலோ தானாகவே வளரும் அபூர்வ வகையான சில வகை மூலிகை செடிகளுக்கு அதிக சக்தி உண்டு. அந்த வரிசையில் இன்று சொடக்கு தக்காளியினைப் பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

sodakku-thakkali

நம்மில் பல பேருக்கு சொடக்கு தக்காளி என்ற ஒன்று இருக்கிறதா என்பதே தெரியாது. இதில் அதனுடைய பயன்களை அறிந்திருக்க வாய்ப்பு என்பது குறைவுதான். கிராமப்புறங்களில் சிறுவர்கள் இந்த தக்காளிப்பழத்தை செடியில் இருந்து பறித்து, நெற்றியில் வைத்து உடைக்கும்போது சொடக்கு போடுவது போல் ஒரு சத்தம் எழும். இதனால்தான் இந்த மூலிகை பழத்திற்கு ‘சொடக்கு தக்காளி’ என்ற பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.

எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத இந்த சொடக்கு தக்காளி மருத்துவ குணம் ஏராளம். இந்த சொடக்கு தக்காளி இலைகளையும், கனிகளையும் மஞ்சள் சேர்த்து அரைத்து கட்டியின் மேல் போட்டு வந்தால், கட்டிகள் சுலபமாக கரையும். கட்டியினால் ஏற்படும் வலியும் சுலபமாக நீக்கிவிடும்.

sodakku-thakkali1

இந்த செடியின் இலைகளையும், காய்களையும் நசுக்கி, ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் போட்டு, நன்றாக கொதிக்க வைத்து அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளையும் சேர்த்து வடிகட்டி குடித்து வந்தால், நம்முடைய உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்தாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த மருந்தை புற்றுநோய் உள்ளவர்களும் தொடர்ந்து குடித்து வரலாம். புற்று நோயினால் ஏற்படக்கூடிய பெரிய அளவிலான பாதிப்புகளை குறைக்கும் என்று சில மருத்துவ குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளது.

sodakku-thakkali2

அதுமட்டுமல்லாமல் இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். நாம் உண்ணும் கடினமான உணவுகள் கூட சுலபமாக ஜீரணம் ஆக வேண்டுமென்றால் இந்த பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது. இந்த பழத்தில் இருக்கும் நார்ச்சத்தானது செரிமானத்தை அதிகப்படுத்துகிறது. இதையெல்லாம்விட அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் என்னவென்றால், இந்த சொடக்கு தக்காளி ஒரு கிலோ 3,000 ரூபாய்க்கு விற்கப்படுவது தான்.