Advertisement

முடக்கு வாதம் குணமாக குறிப்புகள்

முடக்கு வாதம் குணமாக குறிப்புகள்

மனிதர்களின் உடலில் வாதம் எனப்படும் தன்மை அதிகமாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ இருக்கும் போது வாதம் சம்பந்தமான நோய்கள் பல ஏற்படுகின்றன. அதில் ஒன்று தான் இந்த முடக்கு வாதம். இந்நோய் பெரும்பாலும் மனிதர்களின் எலும்பு மூட்டுகளையே பாதிக்கிறது என்றாலும் வைத்தியம் செய்து கொள்ளாவிட்டால் காலப்போக்கில் இதயத்தை கூட பாதிக்கும் சக்தி கொண்டாகும். முடக்கு வாதம் ஏற்பட காரணம், அறிகுறிகள் மற்றும் அதை குணப்படுத்த உதவும் மருத்துவ குறிப்புகள் சிலவற்றை இங்க பார்ப்போம்.

vatham

முடக்கு வாதம் வர காரணம்

உடலில் வாத தன்மை அதிகரிக்கும் போது மூட்டுகளின் சவ்வுகளில் யூரிக் அமிலம் உப்பாக மாறி படிந்து, அந்த பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் இதற்கான சரியான காரத்தை அறிவது சற்று கடினம். உடலில் ஏதேனும் ஒரு சத்து குறைபாட்டால் கூட முடக்கு வாதம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

முடக்கு வாதம் அறிகுறிகள்

காலையில் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும் போது, கால்களின் மூட்டு பகுதிகள் நீண்ட நேரம் விரைத்து கொண்டிருக்கும். இதுவே முடக்குவாதத்தின் முக்கிய அறிகுறி.

தோள்பட்டை, முழங்கை, கைகள் மற்றும் மணிக்கட்டு போன்ற ஏதாவது ஒரு பகுதியில் திடீரென அதிக வலி ஏற்பட்டு எந்த ஒரு பொருளையும் அசைக்க முடியாத நிலை ஏற்படுவது போன்றவை முடக்கு வாதத்திற்கான அறிகுறியாக இருக்கலாம்.

vatham

முடக்கு வாதம் பரவுமா:

முடக்கு வாதம் பெருமபாலும் நடுத்தர வயது உடையவர்கள் பலருக்கே வருகிறது. இந்த நோய் ஒரு பரம்பரை நோய் என்று கொரோனா முடியாது. மிகவும் அறிதவகே இது பரம்பரை பரம்பரையாக வருகிறது. அதே போல முடக்கு வாதம் உள்ளவர்களோடு பழகுவதாலோ அவர்களை தொடுவதாலோ இந்த நோய் நோய் பரவாது.

முடக்கு வாதம் குணமாக வைத்திய குறிப்பு

பூண்டு

பூண்டு மருத்துவ குணமிக்க ஒரு தாவர வகையாகும். இதை தினமும் உணவில் கொள்ள வேண்டும். மேலும் தினமும் சில பூண்டு பற்களை பசுநெய்யில் வதக்கி சாப்பிட்டு முடக்கு வாத பிரச்சனைகளை குறைக்கும்.

Garlic poondu

வெந்தயம்

பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு மருத்துவ உணவு பொருளாக பயன்படுவது வெந்தயம். இந்த வெந்தயத்தை இரவு முழுதும் நீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில், ஊறவைக்கப்பட்ட வெந்தயத்தை மென்று தின்று அந்நீரை குடிக்க வேண்டும். இதை முடக்குவாதம் குறையும் வரை செய்யலாம்.

vendhaya podi

கோதுமை

கோதுமை நார் சத்துக்களையும் பல புரதங்களையும் கொண்ட ஒரு தானியமாகும். இதை அதிகம் உணவாக கொள்ள இந்த முடக்குவாத பிரச்சனையில் சிறந்த நிவாரணம் கிடைக்கும். அதோடு உடலும் பலம் பெறும்.

wheat

விளக்கெண்ணெய்

ஒரு கரண்டியில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து சிறிது சூடேற்றி, உடலில் அனைத்து மூட்டுப்பகுதிகளிலும் நன்கு தேய்த்து கொள்ள மூட்டுகளின் இயக்கம் சரியாக இருக்கும்.

Vilakennai

முடக்கத்தான் கீரை

மூட்டு வலி பிரச்சனைகளை போக்கும் ஒரு சிறந்த மூலிகை முடக்கத்தான் கீரை. இந்த கீரைகளை பச்சையாக தினமும் காலையில் உண்டு வர மூட்டு வலி, முடக்கு வாதம் குணமாகும்.