Advertisement

ரத்த கட்டு குணமாக பாட்டி வைத்தியம்

ரத்த கட்டு குணமாக பாட்டி வைத்தியம்

நமது உடலில் உயிர் நிலைபெற்றிருப்பதற்கு முக்கிய காரணம் நம் உடலின் உள்ளுறுப்புகளின் அனைத்து பகுதிகளிலும் செல்கிற ரத்த ஓட்டம் ஆகும். ஒரு சிலருக்கு உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் அடிபடும் போது வெளிப்புற தோல் பகுதியின் அடியில் ரத்தம் உறைந்து ரத்த கட்டு ஏற்படுகிறது. இதை நீக்குவதற்கான பாரம்பரிய மருத்துவ முறைகளை தெரிந்து கொள்வோம்.

Rathu Kattu

ரத்த கட்டு அறிகுறிகள்

அடிபட்ட பகுதியில் உள்ள தோலுக்கு அடியில் ரத்தம் உராய்ந்து அந்த இடத்தில் சிறிய புடைப்பு போல் இருக்கும். ரத்தம் உறைந்திருப்பதை சில சமயங்களில் வெறுங்கண்களால் பார்க்க முடியும். நாட்கள் செல்ல செல்ல அந்த இடம் கருப்பு நிறமாக மாறும்.

ரத்த கட்டு குணமாக மருத்துவம்

புளி

நாம் உணவில் அன்றாடம் பயன்படுத்தும் புளியை சிறிது எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறியளவு கல்லுப்பை சேர்த்து கலந்து, பிசைந்து பசை போல் ஆக்கி அதை ரத்த கட்டு ஏற்பட்ட இடத்தில் பற்று போட்டு வர ரத்த கட்டு சிறிது சிறிதாக நீங்கும்.

puli

ரத்தபால்

ரத்தபால் என்ற ஒரு வகை வெளிப்பூச்சு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை சிறிது தண்ணீர் விட்டு தேய்த்து ரத்த கட்டு ஏற்பட்ட இடங்களில் தடவ நல்ல குணம் கிடைக்கும்.

மஞ்சள்

தரமான மஞ்சள் பொடியை சிறிது வெந்நீர் விட்டு கலந்து, அந்த கலவையை ரத்த கட்டு ஏற்பட்ட இடங்களில் களிம்பு போல் வைத்து, ஒரு வெள்ளை துணியால் கட்டு போட வேண்டும். இதை தினமும் செய்து வர விரைவில் ரத்த கட்டு சரியாகும்.

Turmeric

ஆமணக்கு, நொச்சி

ஆமணக்கு மற்றும் நொச்சி இலைகளை சிறிது பறித்து விளக்கெண்ணெயில் வதக்கி, அந்த இலைகளை ஒரு வெள்ளை துணியால் கட்டி பாதிக்கப்பட்ட இடங்களில் ஒத்தடம் கொடுத்து வர ரத்த கட்டு கரையும்.

அமுக்கிராங் சூரணம்

நாட்டு மருந்து கடைகளில் இந்த அமுக்கிராங் சூரணம் கிடைக்கும். இதை சூடான பசும்பாலில் ஒரு தேக்கரண்டி அளவு கலந்து காலை மாலை குடித்து வர ரத்த கட்டு விரைவில் நீங்கும்.