OMTEX AD 2

Irandu Valuvamaithi Vilakkam | Tamil Ilakkanam Eduthukattudan

10th Standard Tamil Quarterly Exam Original Question Paper 2025 with Full Solutions

10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்

10th Tamil Quarterly Exam Question Paper

35. ஏதேனும் இரண்டு வழுவமைதிகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

1. இட வழுவமைதி:

தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களில் ஒரு இடம் பிறிதொரு இடமாகக் கூறப்படுவது இடவழுவாகும். ஆனால், அவ்வாறு கூறுவது ஏதேனும் ஒரு காரணம் கருதி அமைந்தால், அது இட வழுவமைதியாகும்.

சான்று: 'இந்த மாறன் ஒருநாளும் பொய் கூற மாட்டான்' எனத் தன்னைப்பற்றிப் பிறரிடம் கூறுவது. (தன்மை படர்க்கை இடத்தில் வந்துள்ளது).

2. கால வழுவமைதி:

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய முக்காலங்களில் ஒன்று பிறிதொரு காலமாகச் சொல்லப்படுவது கால வழுவாகும். விரைவு, மிகுதி போன்ற காரணங்களால் இது அமைந்தால், கால வழுவமைதியாகும்.

சான்று: 'நாளைக்கு முதலமைச்சர் மதுரை வருகிறார்'. (எதிர்காலம், நிகழ்காலத்தில் வந்துள்ளது - வருகையின் உறுதித்தன்மை கருதி).