10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்
30. 'இன்மையிலும் விருந்தோம்பல்' குறித்துப் புறநானூற்றுப் பாடல் தரும் செய்தியை எழுதுக.
குரல் உணங்கு விதைத்தினை என்பதைக் காட்டும் புறநானூற்றுப் பாடலில், வறுமையிலும் விருந்தினரை உபசரிக்கும் பண்பு விளக்கப்படுகிறது. தலைவி, விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டு, குத்தி, விருந்தினருக்கு உணவளித்தாள். மேலும், மற்றொரு புறநானூற்றுப் பாடலில், விருந்தினரைப் பேண, பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் தலைவன். இச்செய்திகள், தமிழர்களின் வறுமையிலும் செம்மையான விருந்தோம்பல் பண்பை உணர்த்துகின்றன.