Skip to main content

Posts

Showing posts from January, 2022

ஆப்பமாவு‌ இப்படித்தான் அரைக்கனும்! கூடை வடிவத்தில், ஆப்பம் சூப்பரா வர, ஒரே ஒரு டிப்ஸ் இருக்கு. அது என்னன்னு நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா?

ஆப்பமாவு‌ இப்படித்தான் அரைக்கனும்! கூடை வடிவத்தில், ஆப்பம் சூப்பரா வர, ஒரே ஒரு டிப்ஸ் இருக்கு. அது என்னன்னு நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா? நிறைய பேருக்கு ஆப்பம் என்றால் மிகவும் பிடிக்கும். இதனாலேயே கடைகளுக்கு சென்று விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால், வீட்டில் ஆரோக்கியமாக, சுவையாக செய்து சாப்பிடுவதற்கு தெரியாது. ஆனால், இட்லி தோசையை விட ஆபத்தை சுலபமாக சுட்டு விட முடியும். அது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆப்பம் செய்வதற்கு தேவையான பொருட்கள்: பச்சரிசி-2 கப் தேங்காய்-2 கப் வெந்தயம்-1/4ஸ்பூன் உளுந்து-ஒரு கைப்பிடி அளவு 2 கப் அரிசி அளவு என்பது, நீங்கள் அரிசியை அளக்க பயன்படுத்த வைத்திருக்கும், ஆழாக்கு அல்லது டம்ளரில் அளந்து கொள்ளலாம். பச்சரிசி கடையிலிருந்து வாங்கும்போது, ‘மாவு பச்சரிசி’ என்று கேட்டு வாங்க வேண்டும். அது பார்ப்பதற்கு வெள்ளையாக இருக்கும். அந்த பச்சரிசியில் செய்ததால் தான் ஆப்பம் நன்றாக வரும். அந்த பச்சரிசியோடு, ஒரு கைப்பிடி அளவு உளுந்து, 1/4 ஸ்பூன் வெந்தயமும் சேர்த்து, மூன்று முறை நன்றாக கழுவிய பின்பு, நல்ல தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். ஊறவைத்த

இட்லி, தோசை, சப்பாத்தி, ஆப்பத்திற்கு இதைவிட, தொட்டுக்க சூப்பரான வேற குழம்பு இருக்கவே முடியாது! மணக்க மணக்க, காரசாரமா ‘நம்ம வீட்டு வடகறி’ எப்படி செய்வது?

இட்லி, தோசை, சப்பாத்தி, ஆப்பத்திற்கு இதைவிட, தொட்டுக்க சூப்பரான வேற குழம்பு இருக்கவே முடியாது! மணக்க மணக்க, காரசாரமா ‘நம்ம வீட்டு வடகறி’ எப்படி செய்வது? இந்த வடகறி முழுக்க முழுக்க நம்ம வீட்டுல செய்யுற வடகறி தாங்க! ஹோட்டல் டேஸ்ட் கட்டாயம் இருக்காது. காரசாரமா சூப்பர் வடகறி எப்படி செய்யறது என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பெரும்பாலும், இப்படி ஒரு வடகறி யாரும் செய்ய மாட்டாங்க! ஆனா, நீங்க ஒரே ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க சூப்பரா இருக்கும். இந்த வடகறி செய்வதற்கு முதலில் மெது பக்கோடாவை சுட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பின், அந்த பக்கோடாவை வைத்து வடகறி தாளிக்க வேண்டும். முதலில் மெது பக்கோடா எப்படி செய்வது, என்பதை தெரிந்து கொண்டு, அதன் பின்பு, வடகறி எப்படி தாளிக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். சுலபமாக தான் இருக்கும். எப்படி செய்வது என்று பார்த்து விடலாமா? மெது பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு-1 கப், சோம்பு-1/2 ஸ்பூன், இஞ்சி-சிறிய துண்டு (தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.), பூண்டு-4 தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள், பெரிய

தலைமுடி பிரச்சனைக்கு ஒரேடியாக ‘குட் பை’ சொல்ல வைக்கும் நம்ம ஊரு பாட்டி வைத்தியம்! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.

தலைமுடி பிரச்சனைக்கு ஒரேடியாக ‘குட் பை’ சொல்ல வைக்கும் நம்ம ஊரு பாட்டி வைத்தியம்! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். தலைமுடி பிரச்சனை பெரிய தலைவலியாக இன்றைய காலத்தில் அனைவருக்குமே இருந்து வருகிறது. தலைமுடி உதிர்வதற்கு முக்கிய பிரச்சினையாக இருப்பது ஊட்டச்சத்து குறைபாடு தான். சரிவிகித உணவு உட்கொள்வதன் மூலம் மிக எளிதாக தலைமுடி பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். அந்த காலங்களில் எல்லாம் பாட்டிமார்கள் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். திருமணத்தில் மணப்பெண்ணின் கூந்தல் எவ்வளவு நீளமாக இருக்கிறது என்பதைப் பொறுத்து தான் அவளின் குணத்தையும் தீர்மானித்தனர். அந்த அளவிற்கு கூந்தல் வளர்ச்சியை முக்கியமாக நமது முன்னோர்கள் கருதி வந்தனர். எனவே அவர்கள் பயன்படுத்திய சில எளிய வழிமுறைகளை இப்பதிவில் நாம் இனி காண இருக்கிறோம். பெண் பார்க்கும் படலம் நடக்கும் போது, பெண்ணின் கூந்தல் எவ்வளவு நீளமாக இருக்கிறது என்பதைத்தான் முதலில் பார்த்தனர். நீண்ட கூந்தல் இருக்கும் பெண்கள் குடும்பத்திற்கு உகந்தவள், ஆரோக்கியமானவள் என்பது அவர்களது நம்பிக்கையாக இருந்தது. நவீன காலத்தில் முடி உதிர்வுக்கு முக்கிய கா

சுவையான, ஆரோக்கியமான பூண்டு குழம்பு! வித்தியாசமான முறையில், ஒரு வாட்டி இப்படி வெச்சு பாருங்க! மதியம் வெச்ச சாப்பாடு, மிச்சம் ஆகவே ஆகாது.

சுவையான, ஆரோக்கியமான  பூண்டு குழம்பு! வித்தியாசமான முறையில், ஒரு வாட்டி இப்படி வெச்சு பாருங்க! மதியம் வெச்ச சாப்பாடு, மிச்சம் ஆகவே ஆகாது. நிறையபேர் வீட்ல பூண்டு குழம்பு செய்வாங்க. ஆனா, அந்த பூண்டை முழுசாக எண்ணெயில் போட்டு வதக்கி செய்வார்கள். சிலபேர் அந்த பூண்டை சாப்பிடாமல், ஒதுக்கி வைத்துவிடுவார்கள். கொஞ்சம் வித்தியாசமாக அந்த பூண்டை அரைத்து பூண்டு குழம்பு வைப்பது எப்படி என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வித்தியாசமான சுவையில் காரசாரமான பூண்டு குழம்பு வைப்பது எப்படி பார்க்கலாம் வாருங்கள்! பூண்டு குழம்பு செய்ய தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய்-4 டேபிள்ஸ்பூன், கடுகு அல்லது வெங்காய வடகம்-தாளிக்க சிறிதளவு, சின்ன வெங்காயம்-10 தோல் உரித்தது, தக்காளி-1 பழுத்தது (சிறிய துண்டாக வெட்டிக் கொள்ளவும்), வெந்தயம்-கால்ஸ்பூன், கறிவேப்பிலை-ஒரு கொத்து, பெருங்காயம்-1/4 ஸ்பூன், புளி-பெரிய எலுமிச்சை பழம் அளவு, பூண்டு-15 லிருந்து 20 திரி வரை தோலுரித்து எடுத்துக்கொள்ளலாம், மிளகாய் தூள்-2 டேபிள் ஸ்பூன், மல்லித்தூள்-1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன். (மசாலா பொருட்கள் கலந்த சாம்பார் ப

1 கப் அரிசி இருந்தால் போதும். வித்தியாசமான இந்த ஊத்தப்பம் 15 நிமிடத்தில் செய்துவிடலாம்! இந்த குட்டி ஊத்தத்திற்கு தோசை மாவு கூட தேவையில்லை.

1 கப் அரிசி இருந்தால் போதும். வித்தியாசமான இந்த ஊத்தப்பம் 15 நிமிடத்தில் செய்துவிடலாம்! இந்த குட்டி ஊத்தத்திற்கு தோசை மாவு கூட தேவையில்லை. ஒரு கப் அரிசியை வைத்து, சத்தான காய்கறி சேர்த்த சுவையான குட்டி ஊத்தப்ப தோசையை தான் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தோசை என்றவுடன் கிரைண்டரில் போட்டு மாவு ஆட்ட வேண்டுமா? என்று பயந்து விட வேண்டாம். மிக்ஸியில் போட்டு சுலபமாக 15 நிமிடத்தில் தயார் பண்ணி விடலாம் அரிசு ஊறுவதற்கு மட்டும் கொஞ்சம் நேரம் எடுக்கும். எப்படி என்பதை பார்த்து விடலாமா? குட்டி தோசை செய்ய தேவையான பொருட்கள்: 1) இட்லி அரிசி – 1 ஆழாக்கு, 2) புளித்த தயிர் – 1/4 கப் 3) உருளைக்கிழங்கு – 1 வேக வைத்தது தோல் உரித்தது, 4) கேரட் – 1 துருவியது 5) வெங்காயம் – பொடியாக வெட்டிக் கொள்ள வேண்டும் 6) இஞ்சி – சிறிதளவு பொடியாக நறுக்கி கொள்ளலாம் அல்லது துருவிக் கொள்ளலாம். 7) பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது 8) குடை மிளகாய்-பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் 9) ஆப்பசோடா – இரண்டு சிட்டிகை 10) சீரகம்-1/4 ஸ்பூன் 11) மிளகாய் தூள்-1/4 ஸ்பூன் 12) உப்பு – தேவையான அளவு 13) மல்

கடையில் வாங்க தேவையில்லை, ‘ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்’ இனி வீட்டில் நீங்களே செய்யலாம் ரொம்ப ரொம்ப ஈஸியா!

கடையில் வாங்க தேவையில்லை, ‘ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்’ இனி வீட்டில் நீங்களே செய்யலாம் ரொம்ப ரொம்ப ஈஸியா! எல்லாருக்குமே ‘ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்’ ரொம்ப பிடிக்கும் இல்லையா? ஷாப்பிங் செல்லும் போதோ அல்லது மால் போன்ற இடங்களுக்கு செல்லும் பொழுதோ இந்த ‘ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்’ நம் கண்களுக்கும், நாவிற்கும் விருந்தாக மாறுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ் வகைகளில் ‘ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்’ முதலிடம் பிடித்திருக்கிறது. இந்த ‘ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்’ நாம் கடைகளில் அதிக விலை கொடுத்து தான் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதை வீட்டிலேயே செய்வதற்கு மிக மிக எளிமையான முறை இருக்கிறது. இதை முன்கூட்டியே தயார் செய்து வைத்துக் கொண்டால் நினைத்த நிமிடத்தில் ‘ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்’ தயாராகிவிடும். அதை எப்படி சுலபமாக செய்யலாம் என்பதை இப்பதிவில் நாம் இனி காணலாம் வாருங்கள். பொதுவாகவே உருளைக்கிழங்கு என்றாலே சுவை பட்டியலில் டாப் 10 இல் ஒன்றாக சேர்ந்து விடுகிறது. இது ஆரோக்கியத்திற்கு அந்த அளவிற்கு நன்மை பயப்பவை அல்ல என்றாலும் அதை நாம் ரசித்து ருசித்து உண்கிறோம். தவிர்க்கமுடியாத காய்கறி வகைகளில் உருளைக் கிழங்கும் ஒன்றாக

நீங்க வைக்கக்கூடிய ரசம் சூப்பரா இருக்கணுமா, இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! ரசம் வெக்க தெரியாதவங்க கூட, சூப்பர் ரசம் வெச்சிருவீங்க!

நீங்க வைக்கக்கூடிய ரசம் சூப்பரா இருக்கணுமா, இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! ரசம் வெக்க தெரியாதவங்க கூட, சூப்பர் ரசம் வெச்சிருவீங்க! நம்முடைய சமையலறையில் தினமும் வைக்கக்கூடியது ரசம். குழம்பை கூட சில பேர் சுவையாக வைத்து விடுவார்கள். ஆனால், இந்த ரசத்தை பக்குவமாக வைப்பதற்கு தெரியாது. காரணம், ரசத்தை பக்குவமாக கொதிக்க வைத்து இறக்க வேண்டும். அதிகமாக கொதித்தாலும் ரசம் நன்றாக இருக்காது. கொதிக்காமல் இருந்தாலும், ரசம் நன்றாக இருக்காது. இந்த ரசத்தை பக்குவமாக வைப்பதற்கு ஒரு குறிப்பு உள்ளது. அது என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ரசம் வைக்க தேவையான பொருட்கள்: புளி – சிறிய எலுமிச்சை பழம் அளவு,  பெரிய தக்காளி – பழுத்தது ஒன்று, உப்பு தேவையான அளவு,  பெருங்காயம் – 1/4 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, சாம்பார் பொடி – 1 ஸபூன், பூண்டு – 5 திரி, மிளகு – 1 ஸ்பூன், சீரகம் – 1ஸ்பூன், மல்லித்தழை – தேவையான அளவு பொடியாக வெட்டிக் கொள்ளவும். வர மிளகாய் – 2, கடுகு. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். புளியை கரைத்து, கடாயில் ஊற்ற வேண்டும். 2 டம்பளர் ரசம் வைக்க வேண்டும் என்றால், அரை ட

உங்க வீட்ல பிரட் இருந்தா போதும். 5 நிமிஷத்துல இந்த பிரட் கட்லட் செஞ்சிடலாம்!

உங்க வீட்ல பிரட் இருந்தா போதும். 5 நிமிஷத்துல இந்த பிரட் கட்லட் செஞ்சிடலாம்! குழந்தைங்க வீட்ல இருக்கும் போது, விதவிதமாகக் சாப்பிடனும்னு ஆசை படுவாங்க. உங்க வீட்ல பிரெட் மட்டும் இருந்தால் போதும். உங்கள் வீட்டில் இருக்கின்ற மற்ற பொருட்களை வைத்தே, சுவையான, ஆரோக்கியமான மொறு மொறு பிரட் கட்லட் எப்படி செய்வது என்பதை பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம். பிரெட் கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்: பிரெட் ஸ்லைஸ் – 6 வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், பச்சை மிளகாய் – தேவையான அளவு பொடியாக வெட்டி கொள்ளவும். தனி மிளகாய்த் தூள்-1 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன், கோதுமை மாவு 3 டேபிள் ஸ்பூன். (உங்கள் வீட்டில் டொமெட்டோ சாஸ், சில்லி சாஸ் இருந்தால் இரண்டிலும் ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம்.) தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளுங்கள். முதலில் ஒவ்வொரு பிரட்டாக எடுத்து, தண்ணீரில் நனைத்து, நன்றாக பிழிந்து ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பொடியாக வெட்டி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும். உங்கள் வீட்ட

இப்படி ஒரு மோர் குழம்பா? வெறும் 4 பொருள் போதுங்க! காரசாரமா சூப்பரா இருக்கும். ஒரு வாட்டி செஞ்சுதான் பாருங்களேன்!

இப்படி ஒரு மோர் குழம்பா? வெறும் 4 பொருள் போதுங்க! காரசாரமா சூப்பரா இருக்கும். ஒரு வாட்டி செஞ்சுதான் பாருங்களேன்! சொன்னா நம்ப மாட்டீங்க! இந்த ஸ்டைல மோர் குழம்பு பொதுவா யார் வெச்சும், யாருமே பார்த்திருக்க மாட்டீங்க. அந்த அளவுக்கு சுவையான மோர் குழம்பு. குறைந்த பொருட்களை வைத்து தான் நாம் செய்யப் போகின்றோம். சில சமயம் மோர்குழம்பு நீர்த்துப் போய்விடும். சில சமயம் மோர்குழம்பு கட்டியாகி விடும். சில சமயம் திரிதிரியாகிவிடும். இப்படிப் பட்ட பிரச்சினைகளுக்கெல்லாம் இந்த மோர் குழம்பில் வாய்ப்பேயில்லை. பயப்படாம அரை மணி நேரத்தில் வச்சுட்டு போயிட்டே இருக்கலாம்! இந்த மோர் குழம்பு எப்படி செய்யலாம்? பார்க்கலாம் வாங்க! மோர் குழம்பு வைக்க தேவையான பொருட்கள்: புளித்த தயிர் – 1/2 லிட்டர் துவரம் பருப்பு – 2 டேபில் ஸ்பூன் அரிசி-1/2 டேபில் ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 15 (உங்கள் காரத்திற்கு ஏற்ப) மோர் குழம்பு கூட்டு மாவு அரைக்க தேவையான பொருட்கள் இந்த 3 தான். துவரம்பருப்பு, அரிசி, காய்ந்த மிளகாய். குழம்பு வைக்கும்போது ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். தாளிப்பதற்கு கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய

மிச்சமான சாதத்தில் இந்த, புதுவிதமான ரொட்டி செஞ்சி பாருங்க! மீதமான சாப்பாட்டை இதில் சேர்த்திருக்கிறீர்கள் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

மிச்சமான சாதத்தில் இந்த, புதுவிதமான ரொட்டி செஞ்சி பாருங்க! மீதமான சாப்பாட்டை இதில் சேர்த்திருக்கிறீர்கள் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. பல பேர் வீடுகளில் சாதம் மீந்துவிட்டால் அதை வீணாக்கி விடுவார்கள். சில பேர் அதை பழைய சாதமாகவே சாப்பிட்டு விடுவார்கள். இன்னும் சில பேர் அதை தாளித்து சாப்பிடுவார்கள். ஆனால் அதை கொஞ்சம் வித்தியாசமான முறையில், கோதுமை மாவு சேர்த்து ரொட்டியாக எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ரொட்டி செய்வதற்கு தேவையான பொருட்கள்: பழைய சாதம் 1 கப், கோதுமை மாவு – 1 கப் பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய்-2, குடை மிளகாய் சிறிதளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை – பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். சிறிதளவு இஞ்சி-துருவியது, தேங்காய்த்துருவல் -1/2 கப், தயிர் – 1/4 கப், சீரகம் – 1/2 ஸ்பூன், வரமிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன், உருளைக்கிழங்கு பெரியது 1 – வேகவைத்து தோலுரித்து மசித்து வைத்துக் கொள்ளுங்கள். முதலில் பழைய சாதத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து கொள்ளுங்கள். ஒரு அகலமான பாத்திரத்தில், ஒரு கப் அளவு கோதுமை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிள

உடல் எடையை குறைக்க, கடலை மாவை வைத்து, சுவையான அடை 15 நிமிடத்தில் செய்துவிடலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள், தைராய்டு பிரச்சினை உள்ளவர்களும் இதை சாப்பிடலாம்.

உடல் எடையை குறைக்க, கடலை மாவை வைத்து, சுவையான அடை 15 நிமிடத்தில் செய்துவிடலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள், தைராய்டு பிரச்சினை உள்ளவர்களும் இதை சாப்பிடலாம். கடலை மாவுடன், நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை சேர்த்து சுவையான, உடனடியான காலை உணவைத் தான், இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குறிப்பாக, சர்க்கரை நோய் உள்ளவர்கள், தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், அரிசியில் செய்த இட்லி தோசையை தவிர்த்து, இந்த உணவை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உடல் எடையை குறைப்பதற்கும் இது ஒரு சுவையான உணவு. இந்த அடையை எப்படி செய்வது என்பதை பார்த்து விடுவோமா? கடலை மாவு அடை செய்ய தேவையான பொருட்கள்: கடலை மாவு – 1 கப் தக்காளி-1 கேரட் – 1 சின்ன வெங்காயம் தோலுரித்து – 10 முதலில் தக்காளி, கேரட், சின்ன வெங்காயம் இவை மூன்று பொருட்களையும் மிக்சியில் போட்டு ரவை பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்ற வேண்டாம் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இஞ்சி சிறிதளவு, பூண்டு 4 திரி – துருவியது, மிளகு சீரகம் – 1 ஸ்பூன் நன்றாக பொடி செய்தது, மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், பச்சை மிளகாய்

வெங்காயமும், தேங்காயும் இருந்தா போதும் சட்டுனு சூப்பர் ‘புலாவ்’ செஞ்சி அசத்திரலாம்!

வெங்காயமும், தேங்காயும் இருந்தா போதும் சட்டுனு சூப்பர் ‘புலாவ்’ செஞ்சி அசத்திரலாம்! தினமும் என்னடா செய்வது! என்று யோசித்து யோசித்தே மண்டை காய்ந்து விடும் போலிருக்கிறதா? மூன்று வேலையும் புதிதாக சமைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். எந்த காய்கறியும் இல்லாத சமயத்தில் வெறும் வெங்காயம் மற்றும் தேங்காய் வைத்தே சூப்பரான புலாவ் ஒன்றை செய்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி பாருங்கள். இதற்கு அதிக நேரம் கூட ஆகாது. அரைமணியில் 6 பேர் சாப்பிடும் அளவிற்கு வெங்காய புலாவ் செய்து முடித்து விடலாம். முதலில் பச்சைமிளகாய் – 3, பூண்டு – 50g, இஞ்சி – 2 துண்டு இந்த மூன்றையும் பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் வாய் அகன்ற குக்கர் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். எப்போதும் குக்கர் வாங்கும் போது அகலமான குக்கராக வாங்குவது நல்லது. இது போன்ற புலாவ் வகைகள் செய்வதற்கு உங்களுக்கு வசதியாக இருக்கும். அடுத்ததாக அரை மூடி பெரிய தேங்காய் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காயிலிருந்து தேங்காய் பால் ஒரு 2 டம்ளர் வரும் அளவிற்கு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 6 முழு முந்திரி பருப்புகளை சிறிது தேங்காய் பால் ஊற்றி